Sharing is caring!

guru peyarchi 2023 - lifestyle tamil

Guru Peyarchi 2023: கிரங்களில் முக்கிய கிரகமான குருபகவான் தற்போது மேஷ ராசியில் அஸ்தமன நிலையில், இருக்கிறார். பொதுவான கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் வரை எடுத்துக் கொள்ளும். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். அதன்படி, இவர் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி மேஷ ராசியில், பூச நட்சத்திரத்தில் உதயமாகிறார். இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண இழப்பு, வியாபாரத்தில் பிரச்சனை போன்ற தீமைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், பல்வேறு ராசிக்காரர்கள் இந்த உதயத்தால் அதிகப்படியான தீமைகளை சந்திக்க இருக்கிறார்கள். எனவே, குரு உதயத்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

guru peyarchi 2023 - lifestyle tamil

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திருமண காரியம் தடைபடும். மாணவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் அவசியம். பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபடும்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களின் வேலை பளு அதிகரிக்கும். அதிகப்படியான மன அழுத்தம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு இருக்கும். வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம், மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு ஏற்படும். கடினமான சூழ்நிலைகளை கையாள வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் ஒருமுறைக்கு, பலமுறை ஆலோசனை பண்ணி எடுப்பது அவசியம்.

(Visited 50 times, 1 visits today)

Sharing is caring!