Parikaram to get Money: இன்றைய உலகில், பணம் சம்பாதிக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது. வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய பெரும்பாலானோர் கடுமையாக உழைத்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஒரு சிலருக்கு எவ்வளவு தான் ஓடி ஓடி கடுமையாக உழைத்தாலும், பணம் என்பது அவ்வளவு எளிதில் தங்கவே தங்காது. நம்மில் பலருக்கு, ஏராளமான கடன் பிரச்சனைகள், வறுமை நிலை சூழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு வாஸ்து குறைபாடும் ஒருவிதமான காரணமாக இருக்கலாம். எனவே, நாம் சம்பாதிக்கும் பணம் வீட்டில் தங்கவும், வறுமை, தனிமை, பீடை போன்ற பிரச்சனைகள் நம்மிடமிருந்து விலகவும் இந்த ஒரு உப்பு பரிகாரம் செய்து பாருங்கள்.
இதற்கு நீங்கள் ஒரு கண்ணாடி டம்ளரில், ஒரு கைப்பிடி அளவு உப்பு போட்டு அந்த டம்ளர் முழுவதும் தண்ணீரால் நிரப்பி விட வேண்டும். பிறகு, மனதில் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து கொண்டு, படுக்கையின் கட்டில் அடியில் வைக்கவும். இப்படி, செய்வதால் வறுமை உங்களை விட்டு விலகுவதுடன், இரவில் நிம்மதியான துக்கத்தை பெற முடியும். இதனால் எந்தவிதமான கெட்ட கனவுகளும் உங்களிடம் வராமல் இருக்கும்.
அதேபோல், கண் திருஷ்டி, பில்லி, சூனியம் நம்மிடம் வராமல் பார்த்துக் கொள்ள வீட்டின் நிலைவாசல் படியில் மஞ்சள் துணியில் ஒரு கைப்பிடி அளவு உப்பினை எடுத்து கட்டி தொங்க விடவேண்டும்.
தானங்கள் செய்வது ஒருவரின் பாவங்கள் விலகி, புண்ணியத்தை கொடுக்கும் என்பது ஐதீகம். அப்படி நாம் செய்யும் தானங்களில், அன்னதானம் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படி, பொன், பொருள் போன்ற தானம் கொடுக்க முடியாமல் இருப்பவர்கள் இந்த ஒரு தானம் செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும்.
தானம் என்பது மனிதருக்கு கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. அதனையும் தாண்டி எத்தனையோ வாய் பேச முடியாத உயிரினங்கள், பூச்சிகளுக்கும் இந்த தானங்களை நீங்கள் கொடுக்கலாம்.
வறுமை நிலையில் இருப்பவர்கள் வீட்டின் நிலைவாசல் படியில் வெல்லத்தை தூவி விட்டு செல்லுங்கள். இதனால், வாய் பேச முடியாத எறும்பு போன்ற ஏதாவது ஒரு உயிரினம் இதனை சாப்பிட்டு விட்டு செல்லும். இதனால், பாவங்கள் விலகி புண்ணியம் உங்கள் குடும்பத்தை சென்றடையும். மேலும், வறுமை உங்களை விட்டு அடியோடு விலகும்.
காலையில் எழுந்து தாய்மார்கள் வீட்டில் வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம். அப்படி, செய்யும் போது அரிசி மாவில் கோலம் போட்டால் எறும்பு போன்ற பல்வேறு உயிரினம் உண்டு பலன் பெறும். இதன் மூலம் உங்கள் வாழ்வு வளம் பெரும். உங்கள் கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம்.