Sukran Peyarchi 2023: ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் செல்வம், புகழ், மகிழ்ச்சி, திருமணம், வெற்றி மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரண கிரகமாக இருகிறார். பொதுவான, கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும் போது, அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். அதன்படி, இந்த மே மாதத்தின் இறுதியில் அதாவது வருகிற மே 30ம் தேதி, சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையடுத்து, சுக்கிரன் வரும் ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். அதன் பிறகு சிம்ம ராசிக்கு இடம்பெயர்கிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஜகேசரி யோகம் உண்டாகிறது. அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிகள் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இருப்பினும், பண விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.உடல் ஆரோக்கியம் மேம்படும். தேர்வு முடிவுகள் சாதகமாக வரும். தொட்டது துலங்கும். திருமண யோகம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் எந்த சூழ்நிலையையும் பொறுமையுடன் கையாள வேண்டும்.
கடகம்:
கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். கணவன் – மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இருக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு பலம் கிடைக்கும். பண ஆதாயமும் உண்டாகும். ஆன்மீக ரீதியான பயணங்கள் இருக்கும்.
மீனம்:
சுக்கிரனின் சஞ்சாரம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்களை தரும். சொத்து வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். நீண்ட நாட்கள் இழுவையில் இருந்த வேலை நிறைவு பெறும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.