Sukran Peyarchi 2023: சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு மாதமும் பல முக்கிய கிரகங்கள், ஒரு ராசியில் இருந்து மற்றுமொறு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறது. இதனால், சிலருக்கு நற் பலன்களும், சிலருக்கு தீய பலன்களும் கிடைக்கப்போகிறது. அதன்படி, ஆடம்பர வாழ்கையின் காரணியான சுக்கிரன் அக்டோபர் 3 ஆம் தேதி அதாவது இன்று கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் வரும் நவம்பர் 29 வரை இந்த ராசியிலேயே இருப்பார். இதனை தவிர்த்து, இந்த அக்டோபர் மாதத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் துலாம் ராசியில் பயணம் செய்கின்றனர். இதனால், இந்த மாதத்தில் திடீர் யோகங்களும், ராஜ யோகமும் சிலருக்கு கைகூடி வரப்போகிறது. அந்த யோகம் நிறைந்த ராசிகள் யார் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
இந்த அக்டோபர் மாதத்தில், உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் கூடும். நிதிநிலை நன்றாக இருக்கும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.
சிம்மம்:
இந்த மாதத்தில், சிம்ம ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நீங்கள் புதிய வருமான வாய்ப்புகளை பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த மாதத்தில், யோகங்கள் ஒன்றாக கூடி வரப்போகிறது. இந்த யோகத்தால் தொட்டது துலங்கும். பண பாக்கியங்கள் சேர்ந்து கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்:
இந்த அக்டோபர் மாதத்தில், மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கையில் கிடைக்கும். நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். கடன் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.