Sharing is caring!

Credit: pexels.com/

Kal Uppu Pariharam: வீட்டின் சமையல் அறையில், கட்டாயம் வைத்திருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் ஒன்று கல் உப்பு. ஏனெனில், இவை வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை போக்கி, நேர்மறையான சக்தியை நமக்கு தருகிறது என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.

மற்ற எல்லா விஷயங்களை காட்டிலும், பணத்தை ஈட்டுவதில் ஒருவர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் பரி பூரணமாக கிடைக்கும்.  வீட்டில் கடன் தொல்லை, வறுமை போன்றவை விலகி, செல்வம் பெருக, வாழ்வில் ஒருமுறையாவது இந்த கல் உப்பு பரிகாரம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும்.

Credit: pexels.com/

இதற்காக முதலில் கடைக்கு சென்று கல் உப்பு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, கல் உப்பினை எடுத்து கிண்ணத்தில் கொட்டி, தண்ணீர் ஊற்றி வீட்டின் குபேர மூலையில் வைக்க வேண்டும். அப்படி, செய்வதால் வீடு முழுவதும் பரவியிருக்கும் கெட்ட சக்திகள் விலகி, நன்மைகள் பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

Credit: pexels.com/

அதேபோன்று, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கல்லுப்பை போட்டு குளித்தால் போதும், உங்களை பிடித்த பீடை, உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடும். குபேரன் அருளால் வீட்டில் பண வரவு உண்டாகும். செல்வம் பெருகும். நீண்ட நாள் தடை விலகும். உங்களின் தொழிலில் லாபம் கூடும்.

வீட்டு வாசலில் திருஷ்டிக்காக மஞ்சள் துணியில் கல்லுப்பை போட்டு கட்டி வைத்தால், உங்களை பிடித்த பீடை விலகும்.  மேலும், வீட்டில் நுழையும் நபர்களின் கண் திருஷ்டி உங்களை விட்டு விலகி விடும்.

Credit: pexels.com/

தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில், கல் உப்பினை போட்டு கிண்ணத்தில் வைத்தால் போதும். கணவன் – மனைவி அன்யோன்யம் பெருகும். இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனைகள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். இந்த கல் உப்பு பரிகாரம் நிச்சயமாகவே நல்ல பலன் கொடுக்க கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(Visited 87 times, 1 visits today)

Sharing is caring!