நாம் ஒவ்வொருவரும் பகல் முழுவதும் ஓடி ஓடி உழைத்து விட்டு இரவில் தூங்க வரும் போது, நிம்மதியான தூக்கம் பெறுவது அவசியம். நாம் வழக்கமாக, உறங்கும் போது பல்வேறு திசைகளில் தூங்குவது வழக்கம். இதன் காரணமாக செரிமான கோளாறு போன்றவை ஏற்படுவது உண்டு. எனவே, வாஸ்து முறைப்படி, தூங்கும் திசையும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். அப்படியாக, வலது புறம், குப்புற படுத்து தூங்குவதை விட ஒருவர், இடது பக்கம் பார்த்தவாறு தூங்குவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அவை என்னென்னெ நன்மைகள், என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.
இடது பக்கம் தூங்குவது நல்லது:
இடது பக்கம் ஒருவர் படுத்து தூங்குவதால் செரிமானம் மேம்படும். ஆம், நமது உடலில் இருக்கும் செரிமானம் ஆகாத உணவுகள் மற்றும் கழிவுகளை சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு எளிமையாக நகர அனுமதிக்கிறது. இவை காலையில் மலமாக வெளியேற்றுகிறது.
இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஏனெனில், இடது பக்கம் இதயம் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு சிறந்த நன்மை தருகிறது. மேலும், சிறுநீரகங்கள் நன்றாக இயங்கவும் வழி வகை செய்கிறது.
நம்மில் பலர் நெஞ்செரிச்சல் பிரச்சனையை எதிர்கொள்கிறோம். ஆனால், ஒருவர் இடது புறமாக படுத்து உறங்கும் போது நெஞ்செரிச்சல் ஏற்படும் அபாயம் குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், இது உங்கள் உடலில் இருந்து திரவங்களை விரைவாக வெளியேற்றவும் உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் இடது புறமாக படுத்து தூங்குவது, கருவுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு இடது புறம் சிறந்த திசையாக உள்ளது. ஒருவேளை, நீங்கள் வலது புறமான படுத்து தூங்கினால், கருப்பை ஆனது உங்கள் கல்லீரலுக்கு எதிராக அழுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருவர் இடது புறமாக படுத்து தூக்குவது குறட்டை பிரச்சனையை சரி செய்யும். பொதுவான ஒருவரின் குறட்டை பிரச்சனை மற்றவர்களின் தூக்கத்தை கெடுக்கும். வலது புறமாக, குப்புறப் படுத்து தூங்குவதை விட இடது புறமாக படுத்து தூங்குவது குறட்டை பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.
அதேபோன்று, இடது புறமாக தூங்கும் போது தலையை சற்று உயரமாக வைத்து தூங்க வேண்டும். ஏனெனில், இந்த நிலை ஈர்ப்பு விசை உங்கள் உடலுக்கு நன்மை செய்கிறது.
மேலும், உங்கள் தலையை தெற்கு வைத்து, வடக்கில் கால்களை நீட்டி உறங்குவது, அறிவியல் ரீதியாக சிறந்த திசையாக வாஸ்து பரிந்துரைக்கிறது.