Sharing is caring!

Diabetic control food: நீரழிவு நோயாளிகள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில், இதய நோய், கொலஸ்ட்ரால், உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்காக நீங்கள் முறையான உடற்பயிற்சி, சீரான உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்கை முறை மாற்றத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். அப்படியாக, உணவு விஷத்தை பொறுத்த வரை ஒருவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

நீரழிவு நோயாளிகள், பழங்களை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இவை நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அப்படியாக, நீரழிவு நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்கள் என்னென்னெ என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

தர்ப்பூசணி பழம்:

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தர்ப்பூசணி பழம், உடலில் ரத்த சர்க்கரையின் அளவினை வேகமாக அதிகரிக்க செய்கிறது.

மாம்பழம்:

கோடை காலத்தில், மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டினை அதிகரிக்கும். எனவே, இதனை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. அதிலும், நீரழிவு நோயாளிகளுக்கு மிக விரைவில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

அன்னாசிப்பழம்:

அன்னாசிப்பழத்தில் இருக்கும் அதிக அளவிலான இனிப்பு சுவை, நீரழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த எதிரியாக பார்க்கப்படுகிறது. இதனை எடுத்துக் கொண்டால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்க செய்கிறது.

வாழைப்பழம்:

உலகம் முழுவதிலும் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் இருக்கிறது. மேலும், இது செரிமான அமைப்பை சீராக்கும். மேலும், வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், நீரழிவு நோயாளிக்கு இது நல்லது கிடையாது.

அதேபோல், அதிக அளவில் கார்போஹட்ரேட் நிறைந்துள்ள உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள், அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள யோகர்ட் மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற பால் பொருட்களை நீரழிவு நோயாளிகள் தொடவே கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

https://lifestyletamil.com/2023/05/15/how-to-know-early-symptoms-of-kidney-failure/

சாப்பிட வேண்டிய உணவுகள்:

இவற்றை தவிர்த்து, நீரழிவு நோயாளிகள் கொய்யாப்பழம், நாவல், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள், நட்ஸ், ப்ரோக்கோலி, மிளகு போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.

https://lifestyletamil.com/2023/05/07/avoid-these-6-foods-during-summer-season/

(Visited 23 times, 1 visits today)

Sharing is caring!