Diabetic control ayurvedic food: இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், சர்க்கரை வியாதி என்பது 40 வயதை கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாறியுள்ளது. இதற்கு நம்முடைய உணவு பழக்கவழக்கம், வாழ்கை முறை மாற்றம், உடல் உழைப்பில்லாமல் இருப்பது மற்றும் மரபணு மாற்றம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய், ஒருவருக்கு உடலில் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது, மேலும் கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.
சர்க்கரை வியாதியை, இயற்கை முறையில் திறம்பட எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆயுர்வேத மூலிகை சிகிச்சையின் படி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள் பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
1, திரிபலா சூரணம்:
ஆயுர்வேத மருத்துகளில் திரிபலா சூரணம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. இது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை ஆகும். நீரழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும். ஏனெனில், இது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. மேலும், கணையத்தின் செயல்திறனை தூண்டி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது. மேலும், நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்று, வயிற்று புண், மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கிறது.
2, வேம்பு:
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து, வேப்பிலை பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட, இந்த வேப்ப இலைகளை கழுவி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து சாற்றை வடிகட்டி குடிக்க வேண்டும். இது உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் அருமருந்தாக உள்ளது. மேலும், வயிற்றுப்புண், குடல் புண் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை தருகிறது.
3, நெல்லிக்காய்:
நெல்லிக்காய் சாப்பிடுவதால், நமக்கு கிடைக்கும் மருத்துவ குணம் ஏராளம். நெல்லிக்காய் சாறுடன் தேன் மற்றும் இளநீர் கலந்து குடிப்பது ரத்த சோகை நோயாளிகளுக்கு அற்புத மருந்தாகும். மேலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைய இருப்பதால், சர்க்கரை நோயாளிக்கு மிக சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவத்தின் படி பார்க்கப்படுகிறது. மேலும், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, நம்மை இளமையாக வைத்திருப்பதுடன் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
4, அமிர்தவல்லி மூலிகை:
அமிர்தவல்லி என்றழைக்கப்படும் சீந்தில் மூலிகையானது, நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
5, பாகற்காய் சாறு:
நாம் ரசித்து ருசித்து சுவைக்கு சாப்பிடும் உணவுகளை விட, கசப்பான உணவுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. அந்த உணவு பொருட்களின் வரிசையில், பாகற்காய் ஒன்றாகும். இதன் சாறு நாள்தோறும் பருகுவது நீரழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கு உதவும் என்று ஆயுர்வேத மருத்துவத்தின் படி கூறப்படுகிறது.