பழங்களை பொதுவாக தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதிலும், ஆப்பிள், சப்போட்டா, திராட்சை, கொய்யா போன்ற பழங்களை தோலுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் முழு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கிறது. ஒரு முழுமையான ஆப்பிளில் சுமார் 8.5 மில்லி கிராம் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. தோலை அகற்றும்போது, அதன் சத்துக்கள் சுமார் 2 கிராம் அளவு குறைந்து இருக்கும். ஆப்பிள் பழத்தில் வைட்டமின் C, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் பல்வேறு ஆன்டி -ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.
மேலும் படிக்க…Cholesterol Control tips: இதயம் ஆரோக்கியமாக செயல்பட தேவையான 5 உதவி குறிப்புகள்..!
இருப்பினும், இன்றைய நவீன கால கட்டத்தில், ஹைபிரிட் விதைகளை கொண்டு பல்வேறு ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனைக்கு வருகிறது. பெரும்பாலும், ஆப்பிள் மரங்களில் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிப்பதால் ஆப்பிள் பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிடலாமா..? என்னும் அச்சம் பலருக்கு உள்ளது.
சாப்பிடும் முறை:
எனவே, ஆப்பிள் பழங்களை சாப்பிடும் முன்பு, கழுவி முதலில் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு தோலில் இருக்கும் மெழுகுப் பூச்சை நீக்க வெதுவெதுப்பான நீரில் 2 – 3 முறை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் ஆப்பிள் தோலில் உள்ள மெழுகுப் பூச்சிகள் நீக்குவதோடு முழுமையான சத்தையும் நாம் பெற முடிவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையை குறைக்கும்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆப்பிள் பழத்தை தோலுடன் சேர்த்து சாப்பிடலாம். அதன் தோலில் இருக்கும் உர்சோலிக் என்னும் அமிலம் தொப்பையை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சுவாசப் பிரச்சனையை சரி செய்யும்:
ஆப்பிள் தோலில் இருக்கும் க்வெர்செடின் என்ற பொருள் சுவாச பிரச்சனையை சரி செய்து, சுவாசப் பாதையை சீராக்கும்.
நீரழிவு நோயாளிகளுக்கு நல்லது:
நீரழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைப்பதில், ஆப்பிள் தோல் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, எலும்புகளை வலுப்படுத்த, வயிறு, கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோயை குணப்படுத்த உதவுகிறது.
மேலும் படிக்க…Heart Problem: இதய நோய் வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய 5 வழிமுறைகள்..!