Pregnancy Parenting: கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பிரசவ காலத்திற்கு முன் சில வாரங்கள் வரை தங்கள் வேலையை தொடரலாம். உங்கள் குழந்தையை பாதிக்காத வரை, வேலையை தொடர்ந்து செய்வதில் உங்களுக்கு எந்த தீங்கும் இல்லை. பொதுவாக பிரசவம் நெருங்கும் வேலையில் சோர்வு அதிகமாக இருக்கலாம். எனவே, நீங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக செயல்பட தேவையான எளிய வழிமுறைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்..
பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
வசதியான உடைகள் மற்றும் பொருத்தமான உள்ளாடைகளை அணியுங்கள்.
கீல்ஸ் ரக செருப்புகளைத் தவிர்த்து, தட்டையான காலணிகளை உபயோகியுங்கள்.
உங்கள் மேசையின் கீழ் ஒரு முக்காலி வைத்து கால்களை மேலே வைத்திருங்கள்.
நிறைய தண்ணீர் குடிக்கவும், அடிக்கடி ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை குடித்து கொண்டு இருக்க வேண்டும்.
கர்ப்பமான இருக்கும் பெண்கள் அலுவலகத்திற்கு செல்லும் போது, ஒரு டிஃபன் பாக்ஸில் போட்டு ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துச் செல்லவும்.
வேலையின் இடையில் சிறிது ஓய்வு எடுத்து கை – கால்களை நீட்டி மடக்க வேண்டும். ஒரே இடத்தில நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேசை மீது ஏதேனும் கூர்மையான பொருட்கள் வைத்திருப்பதை தவிருங்கள். உங்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுங்கள்.
உங்கள் சக ஊழியருடன் கலந்து பேசி மகிழுங்கள். மென்மையான இசையை கேளுங்கள். அதிக உடல் உழைப்பு மற்றும் கடுமையான வேலை செய்வதை தவிர்க்கவும்.
உங்களின் வேலை ஈயம் போன்ற நச்சு வாயுக்கள் வெளிப்படுவதை உள்ளடக்கியிருந்தால், குழந்தை பிறக்கும் வரை வேலைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
அதேபோன்று, இரவு நேரத்தில் நீண்ட நேரம் பணிபுரிவது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக மாதவிடாய் கோளாறுகள், கருச்சிதைவு மற்றும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கட்டாயம் இவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.