Green tea side effects: இன்றைய நவீன காலகட்டத்தில், மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம் கிரீன் டீ ஆகும். அதிலும், உடல் எடையை குறைக்க விரும்பும் பலரும் கிரீன் டீ குடிப்பதை தினசரி வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், கிரீன் டீ குடிப்பதால் உடலில் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கலாம். மேலும், கிரீன் டீ குடிப்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டுள்ளது. இருப்பினும், ”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை போல் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட கிரீன் டீ அதிகமாக குடிப்பது, உடலில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதன் நன்மை, தீமைகள் என்னென்னெ என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கிரீன் டீ குடிப்பது, உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அஜீரணம் தொடர்பான பாதிப்பு:
மேலும், குடல் பிரச்சனை, அஜீரணம் தொடர்பான பாதிப்பு இருப்பவர்கள் கிரீன் டீ குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்று, காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது வயிற்றின் சமநிலையை பாதிக்கும்.
எனவே, ஒருவர் கிரீன் டீயை, உணவு சாப்பிட அரை மணி நேரம் கழித்து எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம். அப்போது தான், இதில் உள்ள நச்சுத்தன்மை கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும்.
கிரீன் டீயில் தூக்கத்திற்கு எதிரான காஃபின் உள்ளது. எனவே, தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள், கிரீன் டீயைக் குடிக்கக் கூடாது.
இதய ஆரோக்கியம் மேம்படும்:
தினமும் 2 கப் அளவு கிரீன் டீ குடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகிய இரண்டும் மேம்படுகிறது.
உடல் எடை அதிகரிக்க:
உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் கிரீன் டீ குடிக்க வேண்டாம். ஏனெனில், இது உங்கள் பசியை குறைகிறது, இதன் காரணமாக உங்கள் உடலும் பலவீனமடையக்கூடும்.
இளமையாக வைத்திருக்கும்:
கிரீன் டீயில் முதுமையை தடுக்கு தன்மை உள்ளது. ஒரு நாளைக்கு 3 கப் வரை, கிரீன் டீ பருகலாம். இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், இது செல்கள் சேதத்தை தடுக்கிறது. எனவே, நீங்கள் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம்.
இருப்பினும் அதிகப்படியான அளவு, கிரீன் டீ குடிப்பது ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்களுக்கு காஃபின் ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் நீங்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.