Cholesterol increasing foods: இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது, பெரியவர் முதல் சிறியவர்கள் வரை கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு மேற்கத்திய உணவு பழக்கவழக்கம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், சிறு வயதிலேயே குழந்தைகள் தைராய்டு போன்ற பாதிப்புகளை எதிர் கொள்கிறார்கள். மேலும், அதிக கொலஸ்ட்ரால் இளம் வயதிலேயே உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உடலில் கொலஸ்ட்ரால் அளவினை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, உடலில் கொலஸ்ட்ரால் அளவினை அதிகரிக்காமல் இருக்க, நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
புகைபிடிப்பது மது அருந்துவது;
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் இருக்க, மது அருந்துவது மற்றும் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில், இதனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுடன், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஜங்க் உணவுகள்:
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் இருக்க, ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த அல்லது பொரித்த துரித உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், பீட்சா, பர்கர் மற்றும் இறைச்சி போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான, பன்றி இறைச்சியில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. மேலும் கேக், பிஸ்கட், ஐஸ்கீரிம் போன்றவற்றில் கொழுப்பின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இது நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவினை அதிகரிப்பதுடன், உடல் பருமன் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வலி வகை செய்கிறது.
செய்ய வேண்டிய உடற்பயிற்சி:
உடற்பயிற்சி தினமும் 1 மணி நேரம் மேற்கொள்வது, ஒருவருக்கு கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வந்து, உடல் சரியாக வேலை செய்யத் தொடங்குகிறது.
சாப்பிட வேண்டிய உணவுகள்:
குறைந்த கொழுப்புள்ள முட்டை அல்லது பால் பொருட்களை உட்கொள்வது, உடலில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவும். அதேபோன்று, மாதுளை, ஆப்பிள், சப்போட்டா போன்ற பழங்களை அவற்றின் இடத்தில் உட்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும். மேலும், பச்சை பயிறு வெள்ளை கொண்டை கடலை போன்றவையும் நன்மை பயக்கும்.