
கர்ப்பமான முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு, வளர்ந்து வரும் சிசுவால் ஹார்மோன் விளைவுகளுக்கு ஏற்றவாறு உங்கள் உடல் மாறுதலால் ஆற்றல் அதிகரிக்கும். மேலும், உங்கள் உடல் முழுவதும் ஒரு ‘கர்ப்ப கால பிரகாசம்’ தோன்றும். அப்படியாக, கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதம் தோன்றும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தாயின் அறிகுறிகள்:
முதல் மூன்று மாதம் இருந்த வாந்தி குறையும். சில நேரங்களில் மட்டும் சோர்வு ஏற்படும். மார்பக வலி, அதுமட்டுமின்றி மார்பக அளவு அதிகரிக்கும், முலைக்காம்பை சுற்றியுள்ள பகுதி கருநீலமாக மாறும்.
சில சமயங்களில் அடிவயிறு, மார்பகங்கள், தொடைகள் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி உருவாகலாம்.

கருப்பை வளருவதன் காரணமாக, உடல் வலி, அடி முதுகு வலி, கால்தசை வலி, ஆகியவை ஏற்படலாம்.
சில நேரம் வறண்ட சருமம் மற்றும் அடி வயிற்றில் அரிப்பு ஆகியவை தோன்றலாம்.
குழந்தைக்கு ஏற்படும் முன்னேற்றங்கள்:
அனைத்து உறுப்புகளின் வளர்ச்சி உண்டாகும். சிறுநீரகங்கள் குடல் ஆகிய உள்ளுறுப்புகள் வடிவம் பெறுகின்றன. குழந்தைக்கு நாவில் சுவை மொட்டுகள் உருவாகின்றன.
காதுக்குள் எலும்புகள் உருவாகின்றன. குழந்தை முகத்தை சுளிக்கும். தொடு உணர்வு உண்டாகும். தாயின் வயிற்றின் அழுத்தம் கொடுத்தால் குழந்தை அதை உணரும்.

தாயால் உணரப்படும் முதல் கரு இயக்கங்கள் விரைவு படுத்துதல் எனப்படும். இது பொதுவாக 16 வாரங்களில் நிகழ்கிறது.
சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிசுவின் அளவு – தோராயமாக 13 முதல் 17 அங்குலம். எடை சுமார் 1100-1350 கிராம் வரை இருக்கும்.
செய்ய வேண்டியவை:
தினமும் ஆரோக்கியமான, நல்ல சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஆம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆரோக்கியமான சத்தான உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் பிறக்கும்.

ஒவ்வொரு நாளும் 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் பருகவும். எனவே, உணவு விஷத்தை பொறுத்த வரை கர்ப்பிணி பெண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வயிற்றின் இருபுறமும் தலையணைகளை வைத்து வசதியாக தூங்க வேண்டும்.
குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருங்கள். மனதிற்கு இதமான இனிமையான இசையை கேளுங்கள்.
அடிக்கடி நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாதவை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஜங்க் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், குளிர்பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிக இனிப்பு நிறைந்த உணவு பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் அதிக அளவிலான ரசாயனம் நிறைந்துள்ளது. இவை, இதய நோய் பாதிப்பு, உடல் எடை அதிகரிப்பது, புற்றுநோய், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.