Sharing is caring!

Credit: pexels.com/

Ashwagandha: ஆயுர்வேத மருத்துவத்தின் படி, பாலியல் பிரச்சனைக்கு மிகச்சிறந்த மருந்தாக அஸ்வகந்தா பயன்படுத்தப்படுகிறது. இந்த அஸ்வகந்தா சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் வந்து சேரும் என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

அஸ்வகந்தா மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுபட வைக்கிறது. மேலும், ஆண்களின் விந்தணுக்களின் செறிவு அதிகரிக்கவும், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாகவும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Credit: pexels.com/

அஸ்வகந்தா அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் செயல்பாட்டிற்கு சிறந்த பலன் அளிக்கும். இரவு பாலில் அஸ்வகந்தா பொடி கலந்து குடிப்பதன் மூலம் இரவில் நிம்மதியாக தூக்கத்தை பெறலாம்.

நீரழிவு நோயாளிகளுக்கு அஸ்வகந்தா உட்கொள்வது சிறந்த பலனளிக்கிறது. இவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இனிப்பு இல்லாத தனி அமுக்ரா சூரணமும் எடுக்கலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடி கலந்த தேநீர் குடிப்பதன் மூலம், இதயத்தில் தமனிகளில் ரத்தகுழாய் அடைப்புகள் உருவாவதை தடுக்க உதவுகிறது.

Credit: pexels.com/

முகம், தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. மேலும், இது முடி உதிர்வு மற்றும் முடி அடர்த்தியாக வளர்வதற்கு அஸ்வகந்தா உட்கொள்வது சிறந்த நிவாரணம் தரும்.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்:

அஸ்வகந்தா கருத்தடை மருந்தாக செயல்படுவதால், கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் கூட அஸ்வகந்தா உட்கொள்ளக் கூடாது.

அதேபோன்று, வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் தெரியாமல் கூட அஸ்வகந்தா உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

(Visited 70 times, 1 visits today)

Sharing is caring!