Cracked Heel, Home Remedies: உங்கள் குதிங்கால்களில் வலி, வீக்கம் எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாக இருந்தால், இந்த இயற்கையான வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றி பாருங்கள்.
பருவகால மாற்றங்கள் காரணமாக குதிங்கால்களில் வெடிப்பு, அரிப்பு, வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். தோல் பராமரிப்பு என்று வரும்போது நமது பாதங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. முகம் மற்றும் உடல் உள் அமைப்புகளை பராமரிப்பது போலவே, குதிகால்களையும் அவ்வப்போது பராமரிப்பது அவசியம். எனவே, குதிங்கால் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் எளிய வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
குதிங்கால் வெடிப்பு ஒருவருக்கு இருக்கும் போது, நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதுமட்டுமின்றி, பொது வெளியில் நாம் நடக்கும் போது அது நமக்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும்.
எனவே, இதுபோன்ற பாதிப்புகள் வராமல் குதிங்கால்களை நாம் பராமரிக்க அழகு நிலையங்களில் பெடிக்யூர் என்னும் ட்ரீட் மெண்ட் செய்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அதிக உடல் எடை காரணமாக குதிங்கால்களில் வலி, வீக்கம் ஏற்படும்.
இறுக்கமான காலணிகள் அணியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நாம் பிரத்யேக பிளாஸ்டர்கள் பயன்படுத்துவது நல்லது.
கால்களை நாம் எப்போதும் கிருமி, நாசினி சோப் மூலம் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் கால்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தொடர்ந்து கிரீம்களைப் பயன்படுத்துங்கள். இப்படி செய்து வந்தால், நாளடைவில் குதிங்கால் வெடிப்பு மறைந்து போகும்.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, பாதங்களை பராமரிக்க எளிய டிப்ஸ்:
இதற்கு முதலில் ஒரு பக்கெட்டில் வெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு டீஸ்புன் எலுமிச்சை சாறு, பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு உங்கள் பாதங்களை அதில் நனைத்து, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கன் நாரைக் கொண்டு தேய்த்து எடுக்கவும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால், உங்கள் கால்களில் இருக்கும் வெடிப்பு மற்றும் கெட்ட செல்கள் விலகி பாதம் மென்மையாக இருக்கும். இருப்பினும், உங்கள் கால்களில் நீர் கோர்த்த வலி, வறட்சி, வீக்கம் எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.