இன்றைய காலகட்டத்தில், மக்களின் வாழ்கை முறையில் பல்வேறு மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதனால், சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பு, முதுகு வலி பிரச்சனை, நீரழிவு பிரச்சனை, கொலஸ்ட்ரால் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
மன அழுத்தம் இல்லாமல் இருங்கள்:
மன அழுத்தம் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, காலையில் எழுந்தவுடன் படுக்கை விரிப்புகளை ஒழுங்குபடுத்துவது, எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருக்க உதவும்.
படுக்கை அழகாக இருப்பது, அற்புதமான காலையில், அற்புதமான உணர்வை தரும். பிறகு, நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
பிடித்த இசையை கேட்கலாம்:
காலையில் நேரம் இருந்தால் பிடித்தமான இசையை கேட்கலாம். இவை மனதில் மென்மையான உணர்வை தரும். மேலும், குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது உளவியல் ரீதியாக நம்மை மேம்படுத்தும். இவை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
போன் மட்டும் எப்போதும் எடுக்காதீங்க..!
செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. பாத்ரூம் செல்லும் போது கூட சிலர் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
காலையில் சாப்பிடும் உணவுகள்:
காலையில் எழுந்ததும் முதல் வேளையாக வாழைப்பழம் சாப்பிடுவது, உடலுக்கு நன்மை பயங்கும். ஓட்ஸ் சாப்பிடுவது, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. காலை உணவாக முட்டை, பாதாம் சாப்பிடுவது, ஆரோக்கியமான உணவு மட்டுமல்ல நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
எனவே, தினமும் காலையில் இந்த உணவுகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் அந்த நாள் முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அந்த நாள் முழுவதும் பாஸிட்டிவான எண்ணம் இருக்கும்.