காலையில், தூங்கி எழுந்ததும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. தினமும் ஒரு கப் டீ குடிக்காமல், சிலரால் தங்களது வேலையை முழுமையாக செய்ய முடியாது. சிலர் தினமும் டீ குடிப்பது தங்களது மன அழுத்தம் குறைக்க உதவுவதாக கூறுகின்றனர். டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரலாம். தினமும் 1 முதல் 2 டீ வரை குடிப்பதில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால், ”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல் ஒரு நாளைக்கு, 2 டிற்கு அதிகமாக டீ குடிப்பது உடலுக்கு பல்வேறு தீங்கு விளைவிக்கும். எனவே, ஒருவர் தினமும் எத்தனை டீ வரை குடிக்கலாம், என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
டீயுடன் சேர்த்து ஆரோக்கியத்திற்கு, செரிமானத்திற்கு உதவக்கூடிய இஞ்சி, நறுமணம் கலந்த புதினா மற்றும் ஏலக்காய், கொழுப்பை குறைக்கும் இலவங்கப்பட்டை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு அளவிற்கு அதிகமாக டீ குடிப்பது, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மன அழுத்தம், குமட்டல், தலைவலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும், இதயத்தில் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் இதயத்தின் அளவு பல மடங்கு அதிகரித்து மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அதேபோன்று, டீயில் காஃபின் மற்றும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவை உடலில் ரத்த சோகையை ஏற்படுத்தும்.
காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது குடல் தொடர்பான பிரச்சனையை மோசமாக்கும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு செரிமான அமைப்பு பலவீனமடைகிறது. சில நேரம் குடலில் கடுமையான தொற்றுகளும் ஏற்படலாம்.
நாம் தினமும் அளவிற்கு அதிகமாக டீ குடிக்கும் போது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம். இதனால், உடலில் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருப்பினும், நீங்கள் ஒரு நாளைக்கு 2 டிற்கு, அதிகமாக டீ குடிக்க விரும்பினால், பால் கலக்காத பிளாக் டீ வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல், பிளாக் டீயை விட க்ரீன் டீ சிறந்தது. ஏனெனில், இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், டீ, காஃபிக்கு பதிலாக மூலிகை டீ குடிப்பதும் நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.