Sharing is caring!

Sani Peyarchi 2023: கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்க கிட்டத்தட்ட 2 1/2 வருடங்கள் ஆகும். ஜோதிடத்தின் பார்வையில், நீதியின் கடவுளான சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை தருகிறார். அதன்படி, ஜூன் 17ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதையடுத்து அவர் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை அங்கேயே இருப்பதால், கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாக இருக்கிறது. இது அதிர்ஷ்டமான யோகம் என்பதால், ரிஷபம், மிதுனம், சிம்மம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம் அடிக்கப்போகிறது.

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் சனியின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொண்டு வரும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.

சிம்மம்:

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். தாய் வழி உறவு வலுப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லலாம். தீராத வியாதிகள் நீங்கும். ஊதிய உயர்வும், சம்பளம் உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்:

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரம் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் வெற்றிகள் கிடைக்கும். இந்த காலத்தில் நீண்ட நாள்பட்ட நோய்கள் சரியாகும். உங்களின் திருமண தடை நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

(Visited 81 times, 1 visits today)

Sharing is caring!