Pregnancy Sex benefits: உடலுறவு மேற்கொள்வது ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் இன்பமான அனுபவமாக இருக்க வேண்டும். யாரேனும் ஒருவருக்கு அதில் ஈடுபாடு குறைந்தாலும், இல்லற வாழ்கை என்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிலும், கர்ப்பகாலத்தில் ஒருவர் உடலுறவு மேற்கொள்வது, ஆண்- பெண் ஆகிய இருவருக்கும் உச்சகட்ட இன்பம் தரும். குறிப்பாக, இந்த நேரத்தில் ஹார்மோன்களாலும், உணர்ச்சிகளில் அதிக தூண்டுதல் ஏற்படும். எனவே, இது போன்ற நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா? மீறினால் என்ன பிரச்சனை ஏற்படும் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும். இதன் விளக்கம் என்ன என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
வேற லெவல் திருப்தி:
உண்மையில், கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாம். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் உச்சகட்ட இன்பத்தை அடையலாம். ஏனெனில், இந்த நேரத்தில் உங்கள் பிறப்புறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உங்களுக்கு வேற லெவல் திருப்தியை தரும்.
உடல் கட்டுப்பாட்டுடன் இருக்கும்:
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உடற்பயிற்சி செய்வது மிகவும் சிரமமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் உடலுறவு மேற்கொள்வது, உண்ணும் உணவில் இருக்கும் தேவையற்ற கலோரிகள், கொழுப்புகளை எரிக்க உதவும். இதனால் ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இருவருக்கும் இடையேயான காதல் அதிகரிக்கும்:
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது, ஆண்களுக்கு துணையின் மீது காதல் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வது இருவருக்கும் இடையேயான காதல் அதிகரிக்கும். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உடலுறவு மேற்கொள்வது, மனதை இலகுவாக மாற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்களை அழைத்து செல்லும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
கர்ப்ப காலத்தில் உடலுறவு மேற்கொள்வது, தாய், சேய் ஆகிய இருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இதனால் சிற்றின்பத்தை உணர்வீர்கள்.
பிரசவ காலம் ஈஸியாக நடக்கும்:
கர்ப்பகாலத்தில் உடலுறவு மேற்கொள்வது, உச்சகட்ட இன்பம் தருவது மட்டுமின்றி, இடுப்பு தசைகளின் சுருக்கங்கள் அந்த பகுதியை பலப்படுத்தும். இதனால், பிரசவ காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கும். மேலும், சிறுநீர் பாதையை சீராக வைக்கும். பிரசவத்திற்குப் பிறகு ஆரோக்கியமான வாழ்கை வாழ்வதற்கு உதவி செய்யும்.