Fruits for Diabetes: நீரழிவு நோய் என்பது 40 வயதை கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாறியுள்ளது. இதற்கு மேற்கத்திய உணவு கலாச்சாரம் மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, உணவு விஷயத்தில் ஒருவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், நீரழிவு நோய் நாளடைவில் உடலில் இதய நோய் பாதிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். நீரழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்வது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. இருப்பினும், குறிப்பிட்ட சில பழங்களை நீரழிவு நோயாளிகள் பயமின்றி எடுத்துக் கொள்ளலாம். அவை என்னென்ன பழங்கள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
கொய்யாப்பழம்:
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை உட்கொள்ளலாம். இது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும், இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்துக்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கும் தன்மை கொண்டது.
ஆப்பிள்:
ஆப்பிள் நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பழமாகும். இதில் நிறைந்துள்ள ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
ஆப்ரிகாட் பழம்:
ஆப்ரிகாட் பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளது. ஆப்ரிகாட் பழம் உடலில் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் உள்ளது. இது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். மேலும், தோல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாவல் பழம்:
நாவல் பழம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, நீரழிவு நோயாளிகளுக்கு நாவல் பழம் மிகவும் நன்மை தரக்கூடியது.
திராட்சைப்பழம்:
சர்க்கரை நோயாளிகள் திராட்சைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். புற்றுநோய் அபாயம் ஏற்படாமல் தடுக்கிறது. எடை இழப்புக்கு உதவும். உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும்.
அவகேடோ:
நீரழிவு நோயாளிகளுக்கு அவகேடோ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் உள்ளது. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்துக்கள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதுடன் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது.
டிராகன் பழம்:
நீரிழிவு நோயாளிகளுக்கு டிராகன் பழம் உட்கொள்வது ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தைத் தடுக்கின்றன. மேலும், டிராகன் பழம் வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்த குறைந்த கலோரி பழம் ஆகும்.
பப்பாளி பழம்:
நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் பப்பாளி பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. பப்பாளி ஒரு வெப்பமண்டல பழமாகும், இதை ஆரோக்கியமான காலை உணவாக உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இதில் அதிகம் நிறைந்துள்ளது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். இந்த பழங்களை தவிர்த்து பேரிக்காய், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களும் நீரழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.