Hair straightening tips naturally: நம்மில் பலருக்கு நீளமான, சில்க்கியான கூந்தல் இருக்க வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். இதற்காக நாம் விளம்பரங்களில் காட்டும், கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், எவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்தி பார்த்தாலும், பலன் மட்டும் முழுமையாக கிடைத்து இருக்காது.
இன்னும் சிலர், பியூட்டி பார்லர் சென்று, ஹேர் ஸ்பா, ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்து கொள்வோம். ஆனால், குறிப்பிட்ட நாட்களில் கூந்தல் பழைய நிலைக்கு திரும்பும். இதனால், முடி கொட்டுவது, பொடுகு, நரைமுடி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இது போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்த குறிப்பு எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில், ஒரு பவுலில் அரிசி வடித்த கஞ்சி 1 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், மருதாணி ஒரு கைப்பிடி அளவு மற்றும் 1 டீஸ்புன் ஆளி விதை ஆகிய இரண்டையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இவை ஜெல் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள். கூடவே, உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள். இப்போது உங்கள் ஹேர் பேக் தயார் செய்யப்பட்டுள்ளது. பிறகு, இந்த ஹேர் ஜெல்லை எடுத்து, உங்கள் தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு, சீப்பை வைத்து சீவி கொள்ளுங்கள்.
இதையடுத்து, பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் தலையை அலசி பாருங்கள். வாரத்திற்கு இரண்டு முறை வீட்டில் இருந்தபடியே, இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள், உங்கள் கூந்தல் நீளமான, சில்க்கியாக ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்தது போல இருக்கும். மேலும், முடி உதிர்வு, பொடுகு தொல்லை நீங்கும்.