Sukran Peyarchi 2023: ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால், வாழ்வில் அவர் நினைத்த காரியம் வெற்றி பெறும். நீண்ட நாள் தடை விலகும். அப்படியாக, செல்வம், புகழ், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் ஜூலை 7-ம் தேதி சிம்ம ராசியில் நுழைகிறார். அதோடு ஜூலை 8-ம் தேதி புதன் கடக ராசிக்குள் நுழைகிறார். முன்னதாக, செவ்வாய் கிரகம் ஜூலை 1-ம் தேதி இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால், குறிப்பிட்ட சில ராசிகள் மகிழ்ச்சி கடலில் நீந்த இருக்கிறார்கள். அப்படியாக, அந்த யோகம் நிறைந்த ராசிகள் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். திருமண காரியம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். இருப்பினும், வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு தொழிலில் முதலீடுகள் இரட்டிப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். வாழ்வில் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியை தரும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும் தொழிலில் லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.