Sani Peyarchi 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீதியின் கடவுளான சனிபகவான் நவகிரகங்களில், மிகவும் முக்கியமானவர். சனீஸ்வரன் என்றழைக்கப்படும் சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருகிறார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பயணிக்க கிட்டத்தட்ட 2 1/2, ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். சனி பகவானின் இடப்பெயர்ச்சி அல்லது நட்சத்திர பெயர்ச்சி ஒவ்வொருவரின் வாழ்விலும், முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி, சத்திய நட்சத்திரத்தில் பெயர்ச்சியான சனி பகவான் வரும் 17 அக்டோபர் 2023 வரை அங்கேயே தங்கி இருப்பார். இதனால், அடுத்த 6 மாதங்களுக்கு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுப பலன்களும், வாழ்வில் சிறந்த முன்னேற்றமும் கிடைக்கப்போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். திடீர் பண வரவு இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். உடல், ஆரோக்கியமாக இருக்கும். அரசாங்க திட்டத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும். தொழிலில் உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற, பலன் கிடைக்கும். வாழ்வில் திடீர் முன்னேற்றம் இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை, சனி பகவானின் அருளால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் லாபம் கூடும். திருமணத்திற்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, சனியின் நட்சத்திர பெயர்ச்சி இரட்டிப்பு பலன் கிடைக்கும். தொழிலில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம் வெற்றியை தரும்.போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். திடீர் பண வரவு உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் உண்டாகும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிக்கிய பணம் கைக்கு வரும். தொழில் வளர்ச்சி பெறும்.