Belly Fat Burn Tips: உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை ஒருவருக்கு, நீரழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நாள்பட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதில் முதன்மையான ஒன்று கொலஸ்ட்ரால் பிரச்சனை, இதனை சரிசெய்வது மிகவும் சவாலான ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம்மில் மணிக்கணக்கில், நின்று ஒர்க் அவுட் செய்கிறார்கள். இருப்பினும், உடல் எடை குறைந்தபாடில்லை. இதற்கு முக்கியமாக நம்முடைய உணவு முறையும், வாழ்கை முறை மாற்றமும் அமைந்துள்ளது. எனவே, உடல் எடையை குறைத்து, தொப்பையை கரைக்க ஆரோக்கியமான உணவு முறைகளை ஒருவர் உட்கொள்வது அவசியம். அதற்கு தேவையான உதவி குறிப்புகளை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
மேலும் படிக்க…இதயம் ஆரோக்கியமாக செயல்பட தேவையான 5 உதவி குறிப்புகள் ..! மிஸ் பண்ணிடாதீங்க…!
பூண்டு:
பூண்டு நம்முடைய அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்வது, உடலுக்கு பல்வேறு சத்துக்களை வழங்குகிறது. அதிலும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கருப்பு பூண்டு உடல் எடையை குறைத்து, கொலஸ்ட்ரால் வராமல் பாதுகாக்கிறது.
கீரை:
கீரையில் நிறைந்துள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
மேலும் படிக்க…இதயம் ஆரோக்கியமாக செயல்பட தேவையான 5 உதவி குறிப்புகள் ..! மிஸ் பண்ணிடாதீங்க…!
ப்ரோக்கோலி:
ப்ரோக்கோலியில் நிறைந்துள்ள அதிக அளவிலான நார்ச்சத்து, உடல் எடையை குறைத்து கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கிறது.
குடை மிளகாய்:
குடை மிளகாயில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கேப்சிகத்தை தவறாமல் உட்கொள்வது, உடல் எடையை குறைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
கருப்பு அரிசி:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியில், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால், கருப்பு அரிசியில் நிறைந்துள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி, நீரழிவு நோய் அபாயத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது.
காலிஃப்ளவர்:
நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள காலிஃபிளவர் எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது.