Money tips: மனிதர்கள் வாழ்வில் பணம் என்பது மிகவும், அவசியமான ஒன்றாகும். பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அப்படிப்பட்ட பணம் நம்மிடம் தங்குவதற்கு, நாம் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஆனால், ஒரு சிலர் என்னதான் கடுமையாக ஓடி ஓடி உழைத்தாலும், பர்ஸில் பணம் என்பது தங்கவே தங்காது. இதற்கு ஆன்மீக ரீதியாக வாஸ்து, குறைபாடும் ஒருவித காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, உங்கள் பர்ஸில் பணம் எப்போதும் நிரம்பிய இருக்க வாஸ்து முறைப்படி நீங்கள் ஒரு சில பொருட்களை, உங்கள் பர்ஸில் வைக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், உங்கள் வாழ்வில் கிடைக்கும் பேரதிஷ்டத்தை யாராலும் தடுக்கவே முடியாது.
சிலருக்கு பழைய பர்ஸ் வைத்திருப்பது மிகவும் ராசியானது, இதில் பணம் வைத்திருப்பதால் நம்மிடம் பணம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
அதற்கு முதலில், உங்கள் பர்ஸில் பணம் எப்போதும் தங்க தாமரையின் விதையை பர்ஸில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்.
பணம் என்பது மகாலட்சுமி தங்கும் இடமாகும். எனவே, பர்ஸை எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
நாம் என்னதான் ATM கார்டு போன்றவை பயன்படுத்தி வந்தாலும்,. நம்முடைய பர்ஸில் ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
விஷ்ணு அரச இலைகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. ஒரு அரச இலையை கங்கா நீரில் சுத்தம் செய்து, அதை உங்கள் பர்ஸில் போட்டு சுத்தமாக வைத்திருங்கள்.
அன்னை மகாலட்சுமியின் படத்தை பணப்பையில் அல்லது பர்ஸில் வைத்திருப்பது, பணப் பற்றாக்குறை இல்லாமல், நிதி நெருக்கடியிலிருந்து விடுபடலாம்.
அதேபோன்று, நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பர்ஸ் தோலினால் ஆன பர்ஸாக இருக்கக்கூடாது. ஏனெனில், லெதர் பர்ஸ் அன்னை லட்சுமி தேவிக்கு கோவத்தை வரவைக்கும். மேலும், பச்சை நிற பர்ஸ் வைத்திருப்பது மிகவும் நல்லது.
செய்யக்கூடாத விஷயங்கள்:
உங்கள் பர்ஸ் அல்லது பணப்பையில் நோட்டை கசக்கிய முறையில் வைத்திருக்க வேண்டாம். இதை செய்வதால் அன்னை மகாலட்சுமியின் கோபம் உங்கள் மீது விழும். எனவே, பணத்தை எப்போதும் ஒழுங்காக அடுக்கி வைத்திருக்க வேண்டும்.
பில்கள் அல்லது ரசீதுகள் போன்றவற்றை பர்ஸ் அல்லது வாலட்டில் வைத்திருக்க வேண்டாம். முக்கியம் என்றால், வேறு ஏதேனும் ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
கத்திகள், ஊசிகள் போன்ற கூர்மையான உலோகப் பொருட்களை பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டாம். இப்படிச் செய்வதால் அன்னை லட்சுமி கோபமடைந்து, அந்த நபரின் வாழ்வில் படிப்படியாக வறுமை வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.