Relationship tips: உடலுறவு என்பது ஆண் -பெண் ஆகிய இருவருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் வேண்டும். உறவில் எவரேனும் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தால், இருவரின் இல்லற வாழ்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. எனவே, உடலுறவு கொள்வதற்கு முன்பு, சில அடிப்படையான விஷயங்களை பற்றிய புரிதல் இருவருக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுறவில் ஈடுபடும் போது சில மோசமான காரணங்கள் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அவை என்னென்னெ காரணங்கள் என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மோதலை தவிர்க்க உடலுறவு கொள்வது சரியா..?
சில நேரம் காதலர்கள் இருவருக்கும் இடையே சண்டையை தவிர்க்க உடலுறவில் ஈடுபடுவார்கள். இதில் ஒருவர் மற்றொருவரை வற்புறுத்தி உறவு கொள்ளும் போது வாழ்வில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சில நேரம் உங்களுக்கு இருவருக்கும் இடையே பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே, முதலில் தம்பதிகள் இருவருக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு பெறுவது அவசியமாகும். பிறகு மகிழ்ச்சியான உறவு கொள்ள வேண்டும்.
போதையில் இருக்கும் போது தவிர்க்க வேண்டும்:
மது போதையில் உடலுறவு கொள்வது, என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும். ஏனெனில், சில நேரம் சுயநினைவை இழந்து தனது கட்டுப்பாட்டை மீறி துணையை வற்புறுத்த நேரிடும். இதனால் உடலில் காயங்கள் ஏற்படும். எனவே, ஆண் -பெண் ஆகிய இருவரும் மது போதையில் இல்லாததை நிச்சயம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு:
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது பல்வேறு சிற்றின்பத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் காலத்தில் உடல் அதிக களைப்பாக இருக்கும். அத்துடன், அடிவயிற்றில் ஒரு விதமான வலி இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் உடலுறவு மேற்கொள்ளும் போது, அது அந்த பெண்ணிற்கு உடலில் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தும். மேலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
ஆணுறை இல்லாமல் உடலுறவா..?
ஆணுறை இல்லாமல் அடிக்கடி உறவில் ஈடுபடும் போது பெண்ணிற்கு பாலியல் தொற்றை ஏற்படுத்தும். இதனால் பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமின்று, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கு கர்ப்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, இதனை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் கவனமுடன் உடலுறவு மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று ஆணுறை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.