ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், கர்ப்பகாலம் என்பது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும். இந்த உலகிற்கு புதிய உயிரை கொண்டு வரும் பெண் கர்ப்ப காலத்தில், மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
அன்றாடம் வாழ்வில், ஒரு கர்ப்பிணி பெண், தன் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பல்வேறு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை எதிர்கொள்ளலாம். இவற்றை அகற்ற கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
வீட்டை சுத்தம் செய்யுதல், வீட்டிற்கு வர்ணம் அடித்தல், பேட்டரிகளை கையாளுதல், நகை தயாரிக்கும் வேலைப்பாடுகள் போன்ற செயல்களில் ஈடுபடுவதை கர்ப்பிணி பெண்கள் தவிர்த்தல் நல்லது.
சுறா, வாள்மீன் போன்ற சில மீன்களில் அதிக அளவில் பாதரசம் உள்ளது. இது குழந்தையின் வளர்ந்து வரும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் கலப்படமான பாலடைக்கட்டிகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் இருக்கும் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.
சமைக்காத உணவுகள் மற்றும் குறைவாக சமைத்த உணவுகளில் இருக்கும் பாக்டீரியா கிருமிகள் சிசுவிற்கு தீங்கு விளைவித்து தாய்க்கும், சேய்க்கும் கடுமையான நோய் உண்டாக்கும்.
ஆஸ்துமா, தைராய்டு நோய், சர்க்கரை வியாதி, வலிப்பு நோய், ஆகியவற்றிற்கு எடுக்கப்படும் மருந்துகள் தாய் வயிற்றில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சியில் குறைபாடுகளை உண்டாக்குகிறது. எனவே, இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிக்சை மேற்கொண்டு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
அதேபோன்று, சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், கஞ்சா போன்ற சட்ட விரோதமான மருந்துகள் சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும்.
ரசாயனம் கலந்து முடிக்கு வண்ணம் பூசுதல், போன்ற கெமிக்கல் கலந்த முடி பராமரிப்பு முறைகளை சிறிது காலம் விலகி வைத்திருத்தல் நல்லது.
ஏனெனில், காற்றின் மூலம் சுற்றுப்புறத்தில் கலந்த, இந்த ரசாயனம் மற்றும் கெமிக்கல் கலந்த உணவை தெரியாமல் கூட உட்கொண்டால், அது தாயின் ரத்தத்தில் கலந்து அது நஞ்சு கொடி மூலம் கடக்கப்பட்டு, குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சூடான நீர் தொட்டிகள் ஆகியவை உடல் வெப்பநிலை சமநிலைப் பாட்டை தவிர்த்து, உடல் வெப்பத்தை அதிகப்படுத்தி சிசுவிற்கு தீங்கு விளைவிக்கும் ஆதலால் இவற்றை தவிர்த்தல் நல்லது.
முதல் மூன்று மாதங்களில் சிசுவின் பல்வேறு உறுப்புகளின் உருவாக்கம் நடைபெறுவதால், எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் போன்றவை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.