Leo Movie Trailer: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளது.
நட்சத்திர பட்டாளம்:
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைப்பில், ஏற்கனவே இந்த படத்தின், போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக, ”நா ரெடி தான் வரவா” பாடல் (Naa Ready ) Youtube தளத்தில் 100 மில்லியன் பார்வையார்களை கடந்து வெற்றி நடை போடுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இதனால், நீண்ட வருடங்களுக்கு பிறகு கில்லி படத்தின் த்ரிஷாவை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், பகத் பாசில் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி இந்திய திரை நடிகர்கள் இந்த லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
லியோ படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் முன்னோட்டமாக இன்று படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளது. ட்ரெய்லர் வெளியாகி 2 மணி நேரத்தில் 15 மில்லியன் பார்வையார்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதன் அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கதைக்களம்:
படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது, ”டூயல் ரோலில்” விஜய் நடித்திருப்பது உறுதியாக தெரிகிறது. இதில் ஏராளமான ரத்தம் தெறிக்கும், காட்சிகளும் வன்முறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. ஆபாச வார்த்தைகளும் சில இடங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தில் சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார்.
லியோ படத்தின் ப்ரீ புக்கிங்:
அதுமட்டுமின்றி, ஒருபுறம் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வேலைகளும் மும்மரமாக துவங்கி நடைபெற்று வருகிறது. ரிலீஸுக்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூல் செய்த, டாப் 5 படங்களில் ஒன்றாக லியோ இருக்கிறது. நிச்சயம் படம் ரிலீசுக்கு பிறகு, நல்ல வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.