Summer cool drinks recipe: வெயில் காலம் துவங்கிவிட்டாலே, நம்மை அறியாமல் பல்வேறு நோய்கள் நம்மை தேடி வருகிறது. ஏனெனில், இந்த நேரத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் குடல் புண், அஜீரணம், மயக்கம், உடல் சூடு, அரிப்பு, வியர்வை மற்றும் சரும வியாதிகள் வந்து நமக்கு தொல்லை கொடுக்கும். எனவே, வெயில் காலத்தில் உடலை எப்போதும் நீரோட்டமாக, மிகவும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் வெயில் காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள் பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப் போகிறோம்.
உடலில் நீர் சத்து குறைவாக காணப்பட்டால், பல்வேறு வியாதிகள் வந்து சேரும். எனவே, தினமும் 1 டம்ளர் மோர் குடிப்பது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
சிறுநீர் கழிக்கும் போது சில நேரங்களில் அந்த இடத்தில் வலி அல்லது வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும்.
வெயில் காலத்தில், இளநீர் குடிப்பது உடலை குளிர்வாக மாற்றுகிறது. மேலும், இதில் இருக்கும் பொட்டாசியம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் அளவை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.
வெயில் காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க, நீர்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
அதிகமாக வெளியே சென்று வேலை செய்பவர்கள், வெயிலுக்கு இதமாக வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ், புதினா, தர்பூசணி, கேரட், ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவற்றின் ஜூஸ் குடிக்கலாம். இல்லையென்றால், சில நேரம் கடுமையான உடல் உஷ்ணம் காரணமாக தலைசுற்றல் , மயக்கம் போன்றவை ஏற்படும்.
உடலில் ஏதேனும் கடுமையான உபாதைகள் காணப்பட்டால், வாழைத்தண்டு நெல்லிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றில் ஜூஸ் போட்டு குடிக்கலாம். இவை உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.