Sani Peyarchi Palangal 2023: ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் பெயர்ச்சி மாற்றம் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி, நீதியின் கடவுளான சனி பகவான் அருள் இருந்தால் ஒருவருக்கு தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். அதுவே சனியின் வக்ர பார்வை ஒருவர் மீது இருந்தால் அவரின் வாழ்க்கையே தலைகீழாக மாறும். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜூன் 17-ம் தேதி முதல் வக்ர நிலையில் உள்ளார். இதையடுத்து, சனி பகவான் வரும் அக்டோபர் 17-ம் தேதி வக்ர நிலையில் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதனால் ரிஷபம், மிதுனம், துலாம் தனுசு, ஆகிய ராசிகளுக்கு அளவில்லாத பலன்கள் கிடைக்கப்போகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு பொன் ,பொருள் வீடு தேடி வரும். திருமண காரியம் கைகூடும். பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட் நாள் திட்டம் நிறைவேறும். தொழிலில் அனுகூலமாக பலன் உண்டு.
மிதுனம்:
கடன் தொல்லை நீங்கும். வீடு, சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடைவீர். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். திடீர் பண வரவு இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
துலாம்:
வேலை மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திடீர் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். செல்வம் பெருகும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு:
வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெருகும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூடி வரும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். அரசு வேலை கிடைக்கும்.