Guru Peyarchi 2023 Palangal: குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் மகிழ்ச்சி, செல்வம், தைரியம், திருமணம், புகழ் ஆகியவற்றின் காரணியான இருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், அவர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். அதன்படி, தற்போது தேவர்களின் குருவான வியாழன் கிரகம் பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளது. வியாழனின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். இதனால், அடுத்த 6 மாதம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது மகிழ்ச்சியை தரும். சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தும். அப்படியாக, குருவின் நட்சத்திர மாற்றம் காரணமாக யார் யாருக்கு என்னென்னெ பலன் கிடைத்தது என்பதை நாம் பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர மாற்றம், மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணம் உறவு கைகூடும். குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி பொங்கும். அதிர்ஷ்டம் பிறக்கும். பணியிடத்திலும் வீட்டிலும் மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும்.
Sukran Peyarchi 2023: சுக்கிரன் இடப்பெயர்ச்சி… ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்..!
சிம்மம்:
சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சி, மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீடு , வாகனம், வாங்கும் யோகம் பிறகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு.
Sukran Peyarchi 2023: சுக்கிரன் இடப்பெயர்ச்சி… ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்..!
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம் லாபம் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், உங்கள் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிலும், அதிக பொறுமையாக இருப்பது நல்லது.