Sharing is caring!

Useful kitchen tips: வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு போன்ற தானியங்களில் பூச்சிகள் வராமல் பாதுகாப்பது பற்றி இல்லத்தரசிகளுக்கு உதவும் சின்ன சின்ன பயனுள்ள சமையல் குறிப்புகளை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

நம்முடைய வீடுகளில் அரிசி பருப்பு போன்ற தானியங்களை மாத கணக்கில் வாங்கி சேமித்து வைத்திருப்போம். இவற்றில் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வண்டுகள், பூச்சிகள் வர ஆரம்பிக்கும். அப்படி நாம் வீட்டில் வாங்கி வைக்கும் சமையல் பொருட்களில், வண்டு வராமல் பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்துக் கொள்வோம்.

அரிசி, பருப்பு வைத்திருக்கும் பாத்திரங்களில் ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். இதனை தவிர்த்து, அரிசி, பருப்பு வைத்திருக்கும் பாத்திரத்தை காற்றுபுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரியாணி இழைகள் :

அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில், 4 முதல் ஐந்து பிரியாணி இழைகளை போட்டு வைக்க வேண்டும். இதன் வாசம், வண்டுகள், பூச்சிகள் போன்றவற்றை கிட்டவே நெருக்க விடாது.

பருப்பு வகைகள்:

கடலை பருப்பு, துவரம் பருப்பு, சிறு பருப்பு போன்ற பருப்பு வகைகளில் காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிகள் வரவே வராது.

பூண்டு , மிளகாய்:

அரிசி பாத்திரத்தில், வீட்டில் இருக்கும் தோல் உரிக்காத பூண்டு, மிளகு, பெருங்காயம் போன்றவற்றையும் போட்டு வைக்கலாம்.

புளியின் சுவை மாறாமல் இருக்க:

ஒரு வருடம் ஆனாலும் புளியின் சுவை மாறாமல், கறுத்து போகாமல் புதிது போல் பிரஷ்ஷாக இருக்க, அவற்றின் கொட்டையை நீக்கி, சிறிது கல் உப்பு சேர்த்து பீங்கான் ஜாடியில் போட்டு வைக்க வேண்டும். இருப்பினும், குழம்பு வைக்கும் போது உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சர்க்கரை பொருட்கள்:

சர்க்கரை டப்பாவில் எறும்பு வராமல் இருக்க மூன்று, நான்கு கிராம்பு துண்டுகளை அதில் போட்டு வைக்க வேண்டும். இப்படி செய்வதால், நீண்ட நாட்கள் அதன் சுவையும், மணமும் மாறாமல் இருக்கும்.

அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்க காய்ந்த மிளகாய் வத்தல் போட்டு வைக்க வேண்டும்.

எறும்புகள் நடமாட்டம் இல்லாமல் இருக்க:

சமையல் அறையில் எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தால், அந்த இடங்களில் எல்லாம் கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவி விடுங்கள்.

இறுதியான, எந்த மசாலா பொருட்களாக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் வெயிலில் காய வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.

(Visited 230 times, 1 visits today)

Sharing is caring!