Tips to Extend Battery Life: இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. சோறு இல்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம், செல்போன் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்கின்ற நிலையில் மக்கள் இருக்கிறார்கள். மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன், மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.
பெரும்பாலும், மக்கள் சமூக ஊடகங்களில் (ஆன்லைனில்) அதிக நேரம் செலவிடுகின்றனர். குறிப்பாக, இன்றைய நவீன காலத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குறைந்தது 100 க்கும் மேற்பட்ட முறை தங்கள் செல்போன் திரைகளைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று ஆய்வு ஒன்று விளக்கியுள்ளது.
நாள் ஒன்றுக்கு அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு கட்டைவிரலின் அடிப்பகுதியில் உள்ள மூட்டுகளின் கீல்வாதத்தையும் ஏற்படுத்தும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நம்முடைய பெற்றோர்கள் பயன்படுத்தும் பட்டன் போனை விட, இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில், எளிதில் பேட்டரி தீர்ந்து போய் விடுகிறது. இதனால், சில இரவு நேரத்தில் அவசர நேரத்திற்கு கூட பயன்படுத்த முடியாமல் போகிறது. இன்னும் சிலர், செல்போனில் சார்ஜ் போட்டுக் கொண்டே பிறருடன் பேசுகிறார்கள். இதனால், சில நேரம் செல்போன் வெடித்து உயிருக்கு ஆபத்தாகவும் முடிவதையும், பல்வேறு செய்திகளில் படித்திருப்போம்.
Belly Fat Burn Tips: தொப்பையை மடமடவென குறைக்கும் சூப்பர் 6 உணவுகள்..மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்..!
உங்கள் ஸ்மார்ட் போனில் பேட்டரி வேகமாக குறையாமல் இருக்க, சில எளிய வழிமுறைகளை கையாள்வது அவசியம்.
அதற்கு முதலில், உங்கள் போனில் வசதிகளை தேவையற்ற இடங்களில் ஆஃ ப் செய்ய வேண்டும். ஆட்டோ பிரைட்னஸ் ஆஃ ப் செய்ய வேண்டும்.
தங்களின் ஸ்மார்ட் போன் பிராண்ட் சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும். இரவு முழுவதும் சார்ஜ் போட்டு வைக்கக் கூடாது.
குறைந்த மின்னழுத்த பேட்டரி (low battery) அல்லது குறைந்த பேட்டரி நிலையில் இருக்கும் போது கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
அதிகப்படியான நோட்டிபிகேஷன் (Notification) வரும் போது மற்றும் அதிகப்படியான ஆப்களை( APP) டவுன்லோட் செய்யும் போது உங்களின் பேட்டரி விரைவில் குறையும்.
ஸ்மார்ட் போனில் இருந்து தேவை இல்லாத ஆப்களை( APP) டெலிட் செய்ய வேண்டும். மேலும், ஸ்மார்ட் போனை டார்க் மோடுக்கு மாற்றி பயன்படுத்துவது, போனுக்கும் நம் கண்களுக்கும் நல்லது.
பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன் பயன்படுத்துவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் செல்போன் பயன்பாடு உடலுக்கும், மனதிற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, ”அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழியினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செல்போன் பயன்படுத்த வேண்டும்.