kidney disease: நமது உடலில் சிறுநீரகங்கள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, அதன் கழிவுகளை சிறுநீர் குழாய் வழியாக வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாமல் போகும் போது, ஒருவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படும். ஆரம்ப கட்டத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள் வெளியே தெரியாது. காலப்போக்கில் இந்த பிரச்சனை தீவிரமடையும். எனவே, ஒருவர் ஆரோக்கியமாக சிறுநீரகங்களை கவனித்துக் கொள்வது அவசியம். இல்லையெனில், சிறுநீரக பிரச்சனை காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீர் பாதிப்பின் அறிகுறிகள்:
சிறுநீரில் துர்நாற்றம் வருவது, ரத்தம் வருவது அல்லது சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர் கழிக்க இயலாமை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது சிறுநீரக நோய்களின் அறிகுறி ஆகும். அதிலும், சிறுநீரில் அமோனியா வாடை தென்பட்டால், அது சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறியாகும். பொதுவாக ஆண்களை விட, பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது.
சிறுநீரக பை தடுக்கும் வழிமுறைகள்:
சிறுநீரக பிரச்சனை ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கல் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு காரணங்களாலும் நிகழலாம். இது தவிர உடல் எடை அதிகரிப்பு, போதுமான தூக்கம் இல்லாதது, அடிக்கடி சோர்வாக இருப்பது, புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவதும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
எனவே, சீரான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை பின்பற்றுவது இந்த பிரச்சனைக்கு நல்ல பலன் தரும். இருப்பினும், சிறுநீரில் துர்நாற்றம் எடுத்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.