
Beauty tips for face: நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம், மக்கள் இயற்கை முறையில் விளையும் உணவுகளை சமைத்து ஆரோக்கியமான வாழ்கை வாழ்ந்து வந்தார்கள். இதனால், உடலும், முகமும் மிகவும் அழகாக காட்சி தரும். அந்த காலம் எல்லாம் தற்போது மலையேறிவிட்டது. இன்றைய நவீன காலத்து பெண்கள் அனைவரும் தங்கள் அழகை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இதனால் பலரும் தங்கள் அழகை தக்க வைத்துக் கொள்ள பியூட்டி பார்லர் சென்று, கெமிக்கல் கலந்த ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கை முறையில் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படி, கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி தங்களை அழகுப்படுத்தி கொண்டாலும், அதற்கான முழு ரிசல்ட் கிடைப்பது கிடையாது. அதுமட்டுமின்றி, இதற்கு வெளியில் செல்லும் போது முகத்தில் படும் தூசிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவது முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வெகு விரைவில், முகத்தில் வெண்புள்ளிகள், தோல் சுருக்கம், போன்றவை வந்து முக அழகை கெடுத்து விடுகிறது.

அதிலும், மற்ற இடங்களை காட்டிலும் குறிப்பாக மூக்கின் மேலும், தாடைக்குக் கீழும் தோன்றும் வெண்புள்ளிகள் முகத்தின் அழகை மொத்தமாகவே கெடுத்து விடுகிறது. எனவே, இது போன்ற வெண் புள்ளிகளை எளிமையான முறையில் போக்க சிறந்த வழிமுறைகளை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

அதற்கு முதலில், ஒரு காலியான கிண்ணத்தில் தயிர், மஞ்சள் தூள் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு, அதனுடன் பல் துலக்கும் ஏதேனும் ஒரு டூத் பேஸ்ட் எடுத்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதனுடன் பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன், எலுமிச்சை சாறு சேர்த்து நல்ல கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது, இந்த கிரீமை எடுத்து உங்களுக்கு முகத்தில் எந்த இடத்தில் எல்லாம் வெண் புள்ளிகள் இருக்கிறதோ..? அந்த இடத்தில் எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, 10 நிமிடம் கழித்து முகத்தை கைகளை கொண்டு மூக்கின் கீழ் பகுதி, தாடையின் மேல் பகுதி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் முகம் குளுகுளுவென்று இருக்க கற்றாழை துண்டுகள் 1 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் தேன் 1 டீஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவி கொள்ளுங்கள்.
இப்படி செய்வதால், முகத்தில் இருக்கும் வெண் புள்ளிகள், அழுக்குகள் நீங்கி சுத்தமாக பளிச்சென்று மாறும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்தால் போதும், முகத்தில் புதிய பொலிவு வரும். நீங்கள் பியூட்டி பார்லர் செல்லாமலே, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இயற்கை முறையில் முக அழகை பராமரித்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்று, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது உங்கள் அழகை மேலும் மெருகேற்றும்.