Sharing is caring!

Heart Attack Symptoms: மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஒரு சில அறிகுறிகள் உடலில் தோன்றும். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

மாரடைப்பு பிரச்சனை வயதானவர்களை மட்டுமின்றி, வயது வித்தியாசம் இல்லாமல் நம் அனைவரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதய தசையின் முக்கிய பகுதிக்கு சீரான ரத்தம் கிடைக்காத போது, ஒருவருக்கு இதய பாதிப்பு அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. இதற்கு நம்முடைய மேற்கத்திய உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, முறையான தூக்கம் மற்றும் சரியான உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் இதுபோன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

மாரடைப்பு என்பது எதிர்பாராமல் திடீரென ஏற்படுவதாக ஒரு சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு சில அறிகுறிகள் உடலில் தோன்றும். ஒருவேளை உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

உடலில் அதிகப்படியான சோர்வு:

உடலில் அதிகப்படியான சோர்வு ஏற்படும். அஜீரணம் தொடர்பான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்படும். இதயத்தில் இருந்து ரத்தம் சரியாக பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

தூக்கமின்மை பிரச்சனை:

தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இரவில் தூக்கம் வராமல் மன அழுத்தம் ஏற்படும். தசைகள் பலவீனமடைவது, அடிக்கடி மயக்கம் வருவது, வியர்வை அதிகரிப்பது போன்றவை ஏற்படும்.

சுவாசிப்பதில் சிரமம்:

ஒருவருக்கு மூச்சுவிடுவதிலும், சுவாசிப்பதாலும் சிரமம் இருந்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதய துடிப்பு:

பயம், பதற்றம், சோர்வு காரணமாக, இதய துடிப்பு சீராக இருக்கும். இவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

நெஞ்சு வலி:

அதேபோல், மார்பகத்தில் ஒரு விதமான அசௌகரியம் இருக்கும். இதனால் உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்படும். எனவே, மார்பகத்தில் அழுத்தம் அல்லது வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

(Visited 23 times, 1 visits today)

Sharing is caring!