Benefits of onion peel: வெங்காயம் அதன் சுவை மற்றும் மணம் காரணமாக பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. சந்தையில் வெங்காயம் விலை உயர்ந்தால், நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக இது உருவெடுக்கும். நம்முடைய வீடுகளில் வழக்கமாக வெங்காயத்தை உரித்து பயன்படுத்திய பிறகு, அதன் தோலை கீழே தூக்கி எறிவது வழக்கம். இனிமேல் நாம் அப்படி குப்பையில் தூக்கி எறியும் வெங்காயத்தின் தோலை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களை செய்யலாம். அவை என்னென்னெ நன்மைகள் என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
கண் பார்வை:
வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகிறது. இது கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது. இதனால் சருமம் மிகவும் பளபளப்புடன் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
இதில் ஆன்டி -ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது உடலில் வைரஸ் தாக்கத்தின் அபாயத்தை குறைக்கும். மேலும், உடலில் சளி -இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது:
வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இதனால் முடி நன்றாக ஆரோக்கியமாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை வராமல் பாதுகாக்கும்.
இதய பாதிப்பு:
இதயம் தொடர்பான நோய்கள் இருப்பவர்களுக்கு வெங்காயம் ஒரு சிறந்த வரப்பிரசாதம் ஆகும். இதன் தோலை எடுத்து அலசி வேகவைத்து குடித்து வந்தால் போதும், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
தொண்டையில் புண் பிரச்சனை இருந்தால், வெங்காயத் தோலை கழுவி வேகவைத்து குடித்து வந்தால் போதும் அது உடனே சரியாகும். மேலும், வெங்காயம் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
உடல் எடை இழப்பு:
உடல் பருமன் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், வெங்காயத் தோலை வேகவைத்து குடித்து வந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.