Sharing is caring!

Side effects of basil: துளசி மூலிகைகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் வேர், பூ போன்றவையும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான மூலிகை துளசி தான். நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து வழி வழியாக சளி, இருமல், காய்ச்சல், போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் பெரிதும் உதவக்கூடும். ஆனால், ”அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம், துளசியை அதிகமாக பயன்படுத்தும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படும். அவை என்னென்னெ என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நீரழிவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள், துளசி சாப்பிட்டால் அது சர்க்கரையின் அளவினை மேலும் குறைய செய்யும். அல்லது அதிகரிக்க செய்யும். இது, தலைசுற்றல், வலிப்பு, குமட்டல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

குழந்தையின்மை பிரச்சனை இருப்பவர்கள் துளசி சாப்பிட கூடாது. ஏனெனில், துளசி இலைகள் கருவுறாமை பண்புகளை கொண்டுள்ளது. எனவே, துளசியை அதிகம் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை குறையலாம். அதுபோன்று, பெண்கள் மாதவிடாய் நேரத்தில் துளசி சாப்பிடக் கூடாது. இது பெண்களின் கருவுறுதல் தன்மையை பாதிக்கும்.

இயற்கையில் துளசி இலையில் பாதரசம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. இதை அதிகமாக மென்று சாப்பிடும் போது பற்கள் சேதமடையலாம். எனவே, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் படி துளசி இலைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

துளசி உட்கொள்வது, இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. துளசியை அதிகமாக உட்கொள்வதால் இரத்தம் மெலியும், அபாயமும் உள்ளது.

அலோபதி நோய்க்காக மருந்துகள் உட்கொள்ளும் போது, துளசி இலைகள் எடுக்க கூடாது. ஏனெனில், இரண்டுமே வலி நிவாரணிகளாகும். இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும்போது அவை கல்லீரலின் செயல்பாடுகளை பாதிக்கும்.

இரத்தம் உறைதலை தடுப்பதற்காக மருந்து எடுத்துக்கொள்பவர்கள், துளசி இலையை சாப்பிடுவது உடல் நலத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(Visited 52 times, 1 visits today)

Sharing is caring!