Fruits to avoid in diabetes: இன்றைய காலத்தில் நீரழிவு நோய் என்பது, உலகளாவிய நோயாக மாறியுள்ளது. வீட்டில் யாரேனும் ஒருவருக்கு நீரழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீரழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், ஏற்படுகிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் இதய துடிப்பு அதிகரிப்பு, சோர்வு, படபடப்பு, நடுக்கம், வியர்த்தல் போன்றவை ஏற்படும்.
நீரழிவு நோயாளிகள் பழுத்த வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும்:
நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோர் பழுத்த வாழைப்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
மாம்பழம்:
மாம்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பழம் இது கிடையாது. எனவே, நீரழிவு நோயாளிகள் இதனை தவிர்த்தல் நல்லது.
அன்னாசிப்பழம்:
அன்னாச்சி பழம் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையில் நன்மை தரும். ஆனால், இந்த பழம் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது கிடையாது. இதில் இருக்கும் கிளைசெமிக் இன்டெக்ஸ் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.
தர்பூசணி பழம்:
தர்பூசணி பழம் மிகவும் குளிச்சியானது, இது உடலில் சூட்டினை குறைக்க நன்மை பயக்கும். இது உடலில் மலசிக்கல், செரிமான பிரச்சனை போன்ற பல்வேறு நோய்களுக்கு நன்மை தரும். இருப்பினும், நீரழிவு நோயாளிகள் இந்த பழத்தினை விரும்பி சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
திராட்சை பழம்:
திராட்சை பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ், அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சனையை அதிகரிக்கும். எனவே, இந்த பழத்தினை மிகவும் கவனமுடன் எடுத்துக் கொள்வது நல்லது.
நீரழிவு நோயினை கட்டுக்குள் வைக்க கடைபிடிக்க வேண்டியவை:
உணவு உண்ணும் அளவினை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். எப்போதும், பச்சை காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மது அருந்துதல், சிகரெட் குடித்தல் போன்றவற்றை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில், அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு குளுக்கோஸ் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.