இன்றைய நவீன கால கட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொண்டு வருகிறோம். நாம் என்னதான் உடல் எடையை விரைவாக குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், உடல் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவதில்லை. இதற்கு மேற்கத்திய உணவு பழக்கவழக்கம், நம்முடைய வாழ்கை முறை, உடல் உழைப்பில்லாமல் இருப்பது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அப்படியாக, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பல்வேறு விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Diabetic Patients: நீரழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 3 உணவு முறைகள்..!
கலோரிகள் பற்றிய புரிதல் வேண்டும்:
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டாலும், மறுபுறம் தேவைக்கும் அதிகமாக உணவு உட்கொள்கிறார்கள். எனவே, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், தாங்கள் உண்ணும் உணவில் எத்தனை கலோரிகள் உள்ளது, என்பதை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். இதன் மூலம் அதிக கலோரிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படும். உடல் எடையை குறைக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
புரதத்தில் கவனம் தேவை:
உடல் எடையை குறைக்க விரும்பும் போது, புரத சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் புரதம் நிறைத்த உணவுகள், பசியை குறைக்க உதவுகிறது. எடை இழப்பின் போது, தசைகளையும் தளராமல் பாதுகாக்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயம் புரதம் நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
உடற்பயிற்சியில் கவனம்:
உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன்பு முறையாக பயிற்சியாளரிடமிருந்து ஆலோசனை பெறுவது அவசியம். முதலில், புதிதாக ஒருவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, மெதுவாக குறைந்த நேரம் துவங்கி பின்னர் நேரத்தை அதிகப்படுத்தப் வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்திலேயே அதிகமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது.
தினசரி பழக்க வழக்கத்தில் மாற்றம்:
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், உங்களின் தினசரி வழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறைந்த நேரம் தூங்குவது மற்றும் அதிக நேரம் தூங்குவது போன்றவை உங்கள் எடை குறைப்பு முயற்சியில் பிரச்சனையை உண்டு பண்ணும். நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும், முறையான வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.