Sharing is caring!

Diabetes control tips: இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை வியாதி என்பது 40 வயதை கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக மாறியுள்ளது. இது உடலில் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து அமைந்துள்ளது. உடலில் சர்க்கரை ஒருவருக்கு அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, குறைவான இருந்தாலும் பிரச்சனையாகும். எனவே, உடலை எப்போதும் சரிவிகித அளவில் பராமரிப்பது அவசியம். இதற்கு உணவு பழக்கவழக்கம், வாழ்கை முறை மாற்றம் முக்கிய ஒன்றான பார்க்கப்படுகிறது. எனவே, ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். அதேபோல், உடற்பயிற்சி, யோக, நீச்சல் பயிற்சி மற்றும் வாழ்கை முறை மாற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க…கொழுப்பை டக்குனு குறைக்கும் மேஜிக் பானம்..! இப்படி ஒருமுறை தயாரித்து குடித்து பாருங்கள்..!

பொதுவாக, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா பழம், தர்பூசணி போன்ற பழ வகைகள் உடலில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். அதேசமயம், கொய்யா, நெல்லிக்காய் போன்றவை சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது நாவல் பழம். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவுதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இவை இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. மேலும், இவை இதயநோய், புற்றுநோய் , ஆஸ்துமா, போன்ற பிரச்சனைகளுக்கும் அருமருந்தாக செய்லபடுகிறது.

மேலும், நாவல் பழத்தின் விதைகளை பொடி செய்து தினமும் 1 டீஸ்புன் உட்கொள்வது ரத்த சோகை, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. மேலும், உங்கள் உடல் எடையினையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே, உடலில் ரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைப்பதற்கு இந்த சீசனில் மறக்காமல் நாவல் பழம் வாங்கி உட்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க…முருங்கையின் மகத்தான 8 மருத்துவ பயன்கள்..! மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க பாஸ்..!

(Visited 34 times, 1 visits today)

Sharing is caring!