
Sex during menstruation: மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது சரியா..? என்கின்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இருப்பினும், சில விஷயங்கள் கவனமுடன் கையாள அவர்கள், பரிந்துரைக்கிறார்கள். அவை என்னென்னெ என்பதை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
மாதவிடாய் காலத்தில், பெண்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். இது போன்ற நேரத்தில் நீங்கள் உடலுறவு மேற்கொள்வது, மன அழுத்தத்தை குறைத்து உங்களை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

சாதராண நாட்களை விட மாதவிடாய் நேரத்தில் உடலுறவு மேற்கொள்ளும் போது, பெண்களுக்கு இருமடங்கு இன்பம் அதிகரிக்கும். இதனால், இருவரும் உச்சகட்டத்தை எளிதில் அடைவீர்கள்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்வது, பெண்களுக்கு ஏற்படும் வலி, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
மாதவிடாய் நாட்களில் உடலுறவால் கர்ப்பம் தரிக்குமா..?
மாதவிடாய் நாட்களில் உறவு வைத்துக் கொள்ளும் பொது, கர்ப்பம் தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக, ஆண்களின் விந்துவானது 2 முதல் 5 நாட்கள் வரை தங்கும் தன்மை கொண்டது. இதனால், பெண்களின் ஓவுலேஷன் அல்லது கருமுட்டை வெடிப்பு நாட்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், நிச்சயம் சில பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே, மாதவிடாய் காலத்தில், நீங்கள் உடலுறவு மேற்கொள்ளும் போது காண்டம் பயன்படுத்துவது நல்லது. இருப்பினும், சில நேரம் காண்டம் சரியாக பொருந்தவில்லை அல்லது கிழிந்து விட்டால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு மற்றும் பால்வினை நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.
மாதவிடாய் காலத்தில் நீங்கள் உடலுறவு மேற்கொள்ளும் போது, மெத்தையை பயன்படுத்தாமல் தரையில் மேற்கொள்வது நல்லது. இல்லையென்றால், மெத்தையில் ஏதேனும் ரப்பர் ஷீட் விரிப்புகளை பயன்படுத்துங்கள்.
மனைவியின் விருப்பம் அவசியம்:

மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வயிற்றுவலி இருக்கும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பினால், உங்கள் மனைவியின் விருப்பத்தை அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இருவருக்கும் சம்மதம் என்றால், செக்ஸ் பொசிஷன்களை கையாளும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் வருமா..?
மாதவிடாய் காலத்தில், செக்ஸ் வைத்துக் கொள்வதால் மாதவிடாய் சுழற்சியில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. இருப்பினும், சில நேரம் ஹார்மோன் மாற்றம் காரணமாக மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் வரும்.

உடலுறவிற்கு பிறகு சுகாதாரம் அவசியம்:
மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொண்ட பிறகு, தனிப்பட்ட சுகாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, உங்களின் பிறப்புறுப்பு பகுதியை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், உங்களுக்கு இந்த நேரத்தில் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இருவருக்கும் சம்மதம் என்ற நிலையில், மேற்கூறிய விஷயங்களை நினைவில் கொண்டு உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.