புதிதாக பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலின் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து நோய் எதிர்ப்பு சக்திகளும் கிடைக்கிறது. குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் இருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
உங்கள் மார்பகங்கள் குழந்தை பிறத்த முதல் சில நாட்களில் மிகவும் செறிவூட்டப்பட்ட, நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டிபாடிஸ் நிறைந்த தாய்ப்பாலை உருவாக்குகின்றன. இது கொலஸ்ட்ரால் அல்லது சீம்பால் என்று அழைக்கப்படுகிறது.
இது பார்ப்பதற்கு மிகவும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உங்கள் குழந்தை சிறிது அளவு சப்புவதில் கூட திருப்தி அடைவர். இது அவசியமாக குழந்தை பிறத்தவுடன் அளிக்கப்படவேண்டும்.
தாய்ப்பால், ஊட்டச் சத்துக்கள் , வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் மட்டும் அல்லாது நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் கொண்டு குழந்தைக்கு எடுத்துச் செல்கிறது. இது குழந்தை பருவ நோய்களான வயிற்றுப்போக்கு, நிமோனியா, ஆகிய நோய்களில் இருந்து விரைவாக குணமடைய உதவுகிறது.
இது எளிதில் செரிக்கப்பட்டு முழுமையாக உறிஞ்சப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் செயல் குழந்தையின் தாடை தசைகளில் வளர்ச்சியை தூண்டுகிறது.
தாய்ப்பால், தாய்க்கும் குழந்தைக்கும் உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாவும் ஒரு சிறப்பு பிணைப்பை உருவாக்குகிறது.
பாலூட்டும் போது தாயுடன் தீவிரமாக தொடர்பு கொள்ளும் போது, குழந்தை நடத்தை, பேச்சு, நல்வாழ்வு உணர்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
தாய்ப்பால், உடல் பருமன், உயர் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, குழந்தை பருவ ஆஸ்துமா மற்றும் குழந்தை பருவ லுகேமியாக்கள் போன்ற நாள்பட்ட நிலைமைகளின் அபாயத்தை குறைக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைக்கு, அதிக மூளைத்திறன் இருப்பதாகவும், செயற்கை பால்கள் ஊட்டப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறப்பாக செயல்படுவதாகவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு, முன்பு மார்பகங்களை தண்ணீரில் சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும், பின்னும் நிறைய திரவங்களை குடிக்கவும். மேலும், நோய்கள் உண்டாவதை தடுக்க உங்களின் தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்துங்கள்.
நீங்கள் குளிக்கும் போது உங்கள் மார்பு காம்புகளை நன்றாக சுத்தம் செய்து, எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்.
குழந்தைக்கு ஒரு பக்கமாக தாய்ப்பால் புகட்டுவதை தடுக்க வேண்டும். ஒருபக்க மார்பகத்தில் முழுவதுமாக புகட்டி, பின்னர் இரண்டாவது மார்க்கத்திலும் புகட்ட வேண்டும்.
குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பால் கொடுப்பது நல்லது. அதிகப்படியான தாய்ப்பால், குமட்டலுக்கு வழிவகுக்கும்.
எதிர்பாராத விதமாக உங்கள் முலைகளில் இருந்து தாய்ப்பால் கசியக் கூடும். அப்போது, உடனே தாய்ப்பால் கொடுப்பது அல்லது தாய்ப்பாலை வெளியே பிழிந்து விடலாம்.