Happy married life in tamil: திருமண வாழ்கை என்பது ஆண் -பெண் ஆகிய இருவரும் மகிழ்ச்சியான இருக்க வேண்டும். இந்த பயணத்தில், தம்பதிகள் ஒருவருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தல், அன்பு செலுத்துதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். திருமணமான தம்பதிகள் இருவருக்கும் ஆரம்பத்தில் இருக்கும் நெருக்கும், சில நாட்கள் சென்றதும் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விரிசல் ஏற்படுகிறது.
இவை சில நேரம் உங்களின் பாலியல் வாழ்கையை சலிப்பாக மாற்றும். இதனால், தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு உங்கள் பாலியல் நெருக்கத்தை அதிகரிக்க தேவையான, உதவி குறிப்புகள் என்ன என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
கட்டிப்பிடி வைத்தியம்:
தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பினை அதிகரிக்க கட்டிப்பிடி வைத்தியம் மிகவும் சிறந்த ஒன்றாகும். இதனால், இருவருக்கும் இடையே அன்பு, காதல், பாசம் போன்றவை அதிகரிக்கும். இருவருக்கும் இடையே ஹார்மோன்கள் தூண்டப்பட்டு உணர்வு அதிகரிக்கும். இது சில நேரம் இருவருக்கும் பாலியல் உறவை அதிகரிக்கும்.
வெளியே செல்ல அடிக்கடி திட்டமிடுங்கள்:
இன்றைய பிஸியான காலத்தில் ஆண்- பெண் ஆகிய இருவருக்கும் அடிக்கடி வெளியில் செல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. தம்பதிகள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வது இருவருக்கும், நெருக்கத்தையும் அதிகரிக்கும். இது உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்கும்.
பாலியல் விருப்பங்களை தெரிவியுங்கள்:
pexels.com/
உங்கள் பாலியல் ஆசைகள், கற்பனைகள் என்ன என்பதை உங்கள் துணைக்கு தெரியப்படுத்த வேண்டும். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கும் அதிகரிக்கும். உங்கள் ஆசை நிறைவேறும். இவை சில நேரம் பாலியல் உறவில் உங்களை உச்சத்திற்கு அழைத்து செல்லும். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும்.
ஒருவருக்கு ஒருவர் சவால் விடுங்கள்:
தம்பதிகள் இருவரும், ஒருவருக்கு ஒருவர் சவால் விடுங்கள். இதனால் உங்கள் வாழ்வில் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும். இவை உங்களை வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்லும். இருவரும் விட்டுக்கொடுத்து நண்பர்களை போல் செயல்பட்டால், வெற்றிகள் குவியும். நீங்கள் நினைத்தது நடக்கும். துணிவு இருக்கும்.
pexels.com/
விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்:
இல்லற உறவில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். பாலியல் உறவு இருவருக்கும் திருப்திகரமாக இருக்க வேண்டும். ஒருவேளை, இருவரில் ஒருவர் அதனை சலிப்பாக உணர்ந்தாலும் உறவு என்பது அவ்வளவு சிறப்பாக இருக்காது. எனவே, விட்டுக்கொடுத்து உணர்வுகளை புரிந்து கொண்டு செல்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.