Cholesterol: நமது உடலில் இதயம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, நாம் மகிழ்ச்சியாக, நலமுடன் வாழ வேண்டும். இல்லையென்றால், உயிர் இழப்பு ஏற்படும். இதற்கு முக்கிய காரணமாக, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்கை முறை மாற்றம் உள்ளது. ஒருவருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டால், முதலில் உங்கள் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு வருகிறது. எனவே, இதயம் ஆரோக்கியமாக செயல்பட தேவையான உதவி குறிப்புகள் என்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
மேலும் படிக்க…Weight Loss Tips: உடல் எடையை உடனே குறைக்கணுமா..? அட்டகாசமான வெயிட் லாஸ் ஐடியா இதோ..!
உணவுமுறை:
இதய ஆரோக்கியத்தில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, ஒருவர் அன்றாடம் சாப்பிடும் உணவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், கீரை மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட சால்மன் மீன் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தூக்கம்:
ஒருவர் நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமான ஒன்றாகும். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு, நீரிழிவு நோய் மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
மேலும் படிக்க…Weight Loss Tips: உடல் எடையை உடனே குறைக்கணுமா..? அட்டகாசமான வெயிட் லாஸ் ஐடியா இதோ..!
உடற்பயிற்சி:
இதய நோய்கள் வராமல் இருக்க தினசரி 1 மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவை, உடல் எடை குறைவாக வைத்துக் கொள்வதுடன், இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
கார்போ ஹைட்ரேட்:
கார்போ ஹைட்ரேட்டுகள், சர்க்கரை உணவுகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது. மேலும், மது அருந்தாமல் இருங்கள். ஏனெனில், இவை உயர் இரத்த அழுத்தம் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
மன அழுத்தம்:
மன அழுத்தம் இருப்பது, உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் இதய ஆரோக்கியம் சீர்குலையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஒருவர் எப்போதும் மன அழுகுதத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை:
அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்த சர்க்கரை அளவுகள் இருப்பதும் உங்கள் இதய ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும். மேலும், எண்ணெயில் பொரித்த உணவுகள், பஜ்ஜி, போண்டா போன்றவற்றில் நிறைய சோடியம், டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க…Weight Loss Tips: உடல் எடையை உடனே குறைக்கணுமா..? அட்டகாசமான வெயிட் லாஸ் ஐடியா இதோ..!