Sharing is caring!

Home remedies tips for heat rash: கோடை காலம் துவங்கிவிட்டாலே சுட்டெரிக்கும் சூரிய கதிர்களின் வெப்பத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிப்படுகின்றனர். எனவே, இந்த கடுமையான கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தினமும் 2 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் காரணமாக, பலரும் வேர்க்குரு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்.

வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க தயிர் பெஸ்டா..? இல்லை மோர் பெஸ்டா ?

இதற்கு நீங்கள் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டரை சேர்த்து வேர்க்குரு இருக்கும் இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இது சரும பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தருகிறது.

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்லை எடுத்து வேர்க்குரு மீது தடவலாம். பிரிஜ்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். ஐஸ் கட்டிகளை எடுத்து வேர்க்குரு இருக்கும் இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதனால், வேர்க்குரு, எரிச்சல் குறையும்.

வேப்பிலை:

வேப்பிலைகளை கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்கலாம். இது, இயற்கையிலேயே வேர்க்குருவினால் ஏற்படும் எரிச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.

தயிர் நல்லது:

மேலும், தயிரை தடவினாலும், வேர்க்குரு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். ஏனெனில், தயிரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வேர்குருவை போக்க உதவும்.

வெயிலுக்கு இதமான குளுகுளு ஜூஸ் ..தினமும் எப்படி எடுத்துக்கணும் தெரியுமா..?

உணவு முறைகள்:

அதேபோன்று, கடுமையான வெயில் காலத்தில் காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதை குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக இளநீர், மோர், நன்னாரி சர்பத், பதநீர், நுங்கு ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளரி, தர்பூசணி, திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு, போன்ற பழச்சாறுகளையும் அருந்தலாம். அதேபோன்று, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

வெயில் நேரத்தில் கடைபிடிக்க வேண்டியவை:

வெயிலில், தொடர்ச்சியாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஆடைகளை பொறுத்த வரை இலகுவான தளர்வான காட்டன் மற்றும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெயிலுக்கு இதமான குளுகுளு ஜூஸ் ..தினமும் எப்படி எடுத்துக்கணும் தெரியுமா..?

(Visited 38 times, 1 visits today)

Sharing is caring!