
Beauty tips for cracked heels: நம்மில் பலர் முக அழகை பராமரிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம். அதற்காக, நாம் பியூட்டி பார்லர் சென்று பல்வேறு பேஸ் பேக், முக அலங்காரங்களை செய்து கொள்கிறோம். ஆனால், முக அழகை நாம் பராமரிப்பது போல், பாத அழகையும் பராமரிக்க வேண்டும். ஆம். பாதங்களில் வரும் பாத வெடிப்பு, பித்த வெடிப்பு போன்றவை உங்களின் கால்களின் அழகை கெடுத்து விடும்.

திருமணம் போன்ற விழாக்களில், உங்கள் கால்களில் மருதாணி போட்டுக் கொள்ள விருப்பம் இருக்கும். அதேபோன்று, செருப்பு அணியும் போது கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்று ஒரு சிலருக்கு தோன்றும். இதற்காக நாம் பியூட்டி பார்லர் சென்று பெடிக்யூர் செய்து கொண்டாலும், உங்களின் காசு தான் செலவு ஆகுமே தவிர பாத வெடிப்பு என்பது நீங்கவே நீங்காது.

இதற்காக நாம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உங்கள் பாதங்களை சுத்தம் செய்வதற்கான, பெஸ்ட் ஐடியாவை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இதற்காக முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் கல் உப்பு 1 கைப்பிடி மற்றும் 1/2 எலுமிச்சை பழ சாறு பிழிந்து விட வேண்டும். இப்போது உங்கள் கால்களை எடுத்து, அந்த வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் வைத்தால் போதும், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்.

பிறகு 5 முதல் 10 நிமிடம் கழித்து, உங்களை பாதங்களை எலுமிச்சை தோல் அல்லது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து விட வேண்டும். பிறகு, வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு ஷாம்பு, சோப்பு பயன்படுத்தி பாதங்களை கழுவி விட வேண்டும்.

இப்படி, வாரம் இரண்டு முறை செய்தால் போதும், பாத வெடிப்பு, பித்த வெடிப்பு போன்றவை முழுமையாக நீங்கி விடும். சில நேரம் உங்கள் பாதங்கள் வறட்சியாக இருப்பது போல் உணர்ந்தால், பாதங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது வாசலின் தேய்த்து கொள்ளுங்கள். இது உடனடியாக நிவாரணம் அளிக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், நிச்சயம் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.