Sperm Increasing Food: இன்றைய நவீன காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது. இதற்கு மேற்கத்திய உணவு முறை மற்றும் வாழ்கை முறை மாற்றம் முக்கிய ஒன்றாக உள்ளது. இதனால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர். எனவே, இதனை தவிர்த்து ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமான ஒன்றாகும். அவை என்னென்னெ உணவுகள் என்ன என்பதை பற்றித்தான் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
பச்சைநிறக் காய்கறிகள்:
தினமும் உணவில் கீரை, பச்சை பயிறு, பீன்ஸ், சுரைக்காய் போன்ற பச்சைநிறக் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், கருவுறுதலுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்றவை இதில் இருக்கிறது.
கீரைகளை சாப்பிட வேண்டும்:
உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை, விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்க செய்யும்.
முட்டை:
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ள உணவுகள் அவசியமானவை. எனவே, கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் முட்டை போன்றவை விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.
மீன்கள் நல்லது:
அதேபோன்று, விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அடிக்கடி உணவில் மீன்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழம்:
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், ஆண்களுக்கு விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வைட்டமின்கள் பி 1 மற்றும் வைட்டமின் சி, மெக்னீசியம் நிறைந்துள்ள வாழைப்பழம் விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது.
பூண்டு:
பூண்டில் உள்ள செலினியம் என்ற நொதி விந்து இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, ஆண்கள், தங்கள் உணவில் பூண்டு அதிகமாக சேர்த்துகொள்வது நல்லது. அதிலும், வறுத்த பூண்டு நிச்சயம் நல்ல பலன் தரும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:
ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். சோயாபீன்ஸ், வாதுமை பருப்பு, புளுபெர்ரி பழ வகைகளால் விந்து அணுக்களின் வடிவம், அளவு, ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை மேம்படுகிறது.
வால்நட்:
வால்நட்டில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, வால்நட்டில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, ஆண்கள் தினமும் 5 வால்நட் எடுத்துக் கொள்வதால் அவர்களின் விந்து இயக்கத்தை மேம்படுத்த உதவும்.
பூசணி விதைகள்:
பூசணி விதைகள் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் கருவுறுதலை அதிகரிக்க உதவுகிறது. இந்த விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் விந்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதனை தவிர்த்து, உடல் எடை சரியான அளவில் பராமரிப்பது. ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. மேலும், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.