
Summer Food Items: கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே, சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் நம்மை வாட்டி வதைத்து விடும். இதிலிருந்து விடுபட உடலை எப்போதும் நீரோட்டமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், உடல் சூடு காரணமாக உடல் சோர்வு, வயிற்று வலி, சருமத்தில் கொப்புளங்கள், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்த்து உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த 10 உணவுகளை பற்றி, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
வெள்ளரிக்காய்:

நீர்சத்து மற்றும் நார்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் உடல் வெப்பநிலையை குறைப்பதுடன் செரிமான கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
எலுமிச்சை:
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட எலுமிச்சை, உடல் சூட்டினை தணிக்கும் உதவும் சிறந்த பழமாகும்.
தர்பூசணி பழம்:

நீர்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி பழம் உடல் சூட்டினை தணித்து உடலை நீரோட்டமாக வைத்துக் கொள்கிறது. குறிப்பாக, இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு நல்லது.
வெந்தயம்:
நார்ச்சத்து மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ள வெந்தயம் எடுத்து, இரவில் 1 டீஸ்பூன் அளவு ஊற வைத்து பகலில் குடித்து வந்தால், உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் உபாதைகளை தடுக்கும். மேலும், சிறுநீர் பாதையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

முலாம்பழம்:
உடலில் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் முலாம்பழம் ஆனால், அதிக அளவில் எடுத்துக் கொண்டால், சளி, இருமல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, முலாம்பழம் அளவுடன் எடுத்துக் கொண்டு நலமுடன் வாழ்வது நல்லது.
இளநீர்:
இளநீர் குடிப்பது உடல் சூட்டினை குறைப்பதுடன் ரத்த சர்க்கரை அளவினை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நுங்கு:
நீர்சத்து மற்றும் கனிமம் சத்துக்கள் நிறைந்த நுங்கு அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டினை வேகமாக குறைக்கும்.

புதினா டீ:
காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக புதினா டீ குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. மேலும், இது உடல் வெப்பநிலையை குறைக்கும்.
பதநீர்:
சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ள பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் உடல் வெப்பநிலையை குறைத்து சமநிலைப்படுத்த உதவுகிறது.

மோர்:
உடல் உஷ்ணத்தை குறைக்கும் மோர் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. அதுமட்டுமின்று, கம்பங் கூழ் சாப்பிடுவது உடலுக்கு அதிக குளிர்ச்சியை தரும். மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.