Ayalaan Teaser 2023: சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முதல் ஏலியன் படம்:
சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ் சினிமாவில் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியுள்ளது.’நேற்று இன்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். வேற்றுகிரக வாசியை மையமாக வைத்து, (சயின்ஸ் பிக்ஷன் ஜானரில்) உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.
பொங்கலுக்கு ரிலீசாகும் அயலான்:
இருப்பினும், இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையாத காரணத்தால், படத்தின் ரீலிஸ் தேதி தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தை ஒருவழியாக வரும் பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘அயலான்’ படத்தின் டீசர்:
இந்த நிலையில், தற்போது அயலான் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஏலியன், சிவகார்க்கேயனுடம் இணைந்து டீ போடுவது, அரட்டை அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக காட்டப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமெடி காட்சிகள் அதிக அளவில் இருக்கும். கூடவே, யோகிபாபு காமெடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் நிச்சயம் இந்த படம் நல்ல காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘அயலான்’ படத்தின் டீசர் வெளியான சுமார் 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.